ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து டைரக்டர் விக்னேஷ் சிவனை, நடிகை நயன்தாரா திட்டிய விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது. நானும் ரவுடி தான்' படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன்  சூர்யாவை வைத்து தான சேர்ந்த கூட்டத்தை இயக்கினார். இதையடுத்து மீண்டும் ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' படத்தின் மூலம் மீண்டும் தன் வெற்றிக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார். கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தில், இவர்களுடன் சமந்தாவும் இணையத்துள்ளார். இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாரா தனது சொந்த தாயரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மொத்தத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நிச்சயம் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஹிட் படம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.



விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரொமோஷனுக்காக விஜய் சேதுபதியும், விக்னேஷ் சிவனும் ஒரே சமயத்தில் பல மீடியாக்களுக்கு ஒரே சமயத்தில், அடுத்தடுத்து பேட்டி கொடுத்துள்ளனர். அப்படி அளித்த பேட்டியின் போது விஜய் சேதுபதியிடம், ஷுட்டிங் ஸ்பாட்டில் நிஜமான காதல் ஜோடி இருந்துள்ளது. அது பற்றி சொல்லுங்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, அப்படி ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் இருவருமே வேலையில் கரெக்டாக இருப்பார்கள். நானும் ரெளடி தான் ஷுட்டிங் முடிந்த பிறகு பலரும் என்னிடம் இவர்களின் காதல் பற்றி கேட்டனர். அப்படி எதையும் நான் பார்க்கவில்லை என்று தான் சொன்னேன். பிறகு நானே ஒருநாள் தனியாக விக்கியிடம் கேட்ட போது தான் அவர் உண்மையை சொன்னார் என்றார்.



அதுபற்றி பேசிய விக்னேஷ் சிவன், "எங்கள் ரிலேஷன்ஷிப் ஆரம்பித்த புதிதில்தான் அந்த இன்டர்வெல் பிளாக் எடுத்து கொண்டிருந்தோம். அதில் முக்கியமான ஒரு ஷாட்டில் சாரும், நயனும் லிப்லாக் செய்யும் காட்சிக்கு முன்னதாக உதட்டின் அருகில் உதடு வைத்து பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த ஷாட்டை வேறு மாதிரி எடுத்துக் கொள்ளலாம் என்று நயன் சொன்னார். நான்தான் இதிலென்ன இருக்கு எடுக்கலாம், ரொம்ப முக்கியமான ஷாட், அப்படிதான் செய்யனும் என்று எடுத்தோம். அந்த சீன் எடுக்கும் போது, இன்னும் நெருக்கமாக வாங்க...இன்னும் வாங்க என நான் சொன்னதால் கடுப்பான நயன்தாரா, மெதுவாக பக்கத்தில் வந்து, 'சைக்கோ' என திட்டிவிட்டு போனார்", என்றார்.


நானும் ரெளடி தான் படம் முடிந்ததும், இன்னொரு செம்மயான படம் பண்ணிய பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்து விட்டோம். காத்து வாக்குல காதல் கதையை அதற்கு முன்பே தயார் செய்து வைத்திருந்ததால் அதையே எடுக்கலாம் என 2016 லிருந்து முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் அது பண்ண முடியாமல் போனதால், தானா சேர்ந்த கூட்டம் படம் பண்ண போய் விட்டேன். அதை முடித்து மீண்டும் இந்த படத்தை துவங்கும் போது கொரோனா வந்து விட்டது. ஒரு வழியாக சமாளித்து படத்தை முடித்து விட்டோம். அதனால் காத்துல வாக்குல ரெண்டு காதல் படம் பர்சனாலவும் எங்களுக்கு மிக நெருக்கமான படம் என்றார் விக்னேஷ் சிவன். அதோடு பேட்டியின் போது பலமுறை தானும், நயன்தாராவும் ஒரே வீட்டில் இருப்பதை திரும்ப திரும்ப அவர் கூறினார். ஒரே வீட்டில் இருந்தாலும் செட்டில் அவரை இம்ப்ரெஸ் செய்ய நிறைய கிரியேட்டிவான விஷயங்களை செய்துகொண்டிருப்பேன் என்று கூறினார்.