National Film Awards 2023 Tamil Winners List: 69ஆவது தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2021ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 28 மொழிகளில் வெளியான 280 படங்கள் இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தேசிய விருதுகளை வென்ற தமிழ் படங்களைப் பார்க்கலாம்!


கடைசி விவசாயிக்கு 2 தேசிய விருதுகள்




மணிகண்டன் இயக்கி, விவசாயி நல்லாண்டி, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த கடைசி விவசாயி திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறப்பு பிரிவில் விவசாயி நல்லண்டிக்கும், சிறந்த தமிழ் மொழி படத்துக்கான விருது கடைசி விவசாயி படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது..


நடிகர் மாதவன் இயக்கி, நடித்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். நடிகை சிம்ரன் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்துக்கு சிறந்த  திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது..


இரவின் நிழல் பட பாடல்




நடிகர் ஆர். பார்த்திபன் இயக்கி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘இரவின் நிழல்’ படத்தின் பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ‘மாயவா தூயவா... ’ என்ற பாடலுக்கு ஸ்ரேஷா கோஷல் சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றுள்ளார்.


ஆவணப் படங்கள் பிரிவு


அதேபோல் கருவறை என்ற ஆவணப்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் திரைப்படமல்லாத Non Feature படங்களின் பிரிவில் இயக்குநர் பி.லெனினின் “சிற்பிகளின் சிற்பங்கள்” படத்துக்கு சிறந்த கல்வி திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


பிற மொழி படங்கள்


இதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கிய ஷேர்ஷா படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,



  •  சிறந்த திரைப்படம் : ராக்கெட்ரி ( இந்தி)

  • சிறந்த இயக்குநர் : நிகில் மஹாஜன் மற்றும் கோதாவரி

  • சிறந்த பொழுதுபோக்குக்கான பிரபலமான திரைப்படம்: ஆர்ஆர்ஆர்

  • சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படம்: தி காஷ்மீர் ஃபைல்ஸ்

  • சிறந்த நடிகர்: அல்லுர் அர்ஜூன்( புஷ்பா தி ரைஸ்)

  • சிறந்த நடிகை: அலியா பட் ( கங்குபாய் கத்தியவாடி), கீர்த்தி சனோன் (மீமி)

  • சிறந்த துணை நடிகர்: பங்கஜ் திரிபாதி ( தி காஷ்மீர் ஃபைல்ஸ்)

  • சிறந்த துணை நடிகை: பல்லவி ஜோஷி ( தி காஷ்மீர் பைல்ஸ்) 

  • சிறந்த இசையமைப்பாளர் ( பாடல்) : தேவி ஸ்ரீ பிரசாத் ( புஷ்பா)

  • சிறந்த பின்னணி இசை : எம்.எம்.கீரவாணி ( ஆர்.ஆர்.ஆர்.)

  • சிறந்த பின்னணி பாடகர் : கால பைரவா, ஆர்.ஆர்.ஆர்( தெலுங்கு)

  • சிறந்த பின்னணி பாடகர் : கால பைரவா, ஆர்.ஆர்.ஆர்( தெலுங்கு)

  • சிறந்த பாடல் வரிகள் : சந்திரபோஸ் ஆகிய விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.