National Film Awards 2023: கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பாலிவுட் நடிகை அலியா பட் பெற்றுள்ளார். 


2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைபப்ட தேசிய விருது இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த படங்களை கொண்டு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த பாடகர், சிறந்த படத்தொகுப்பு, தொழில்துறை வல்லுநர்கள் என பல்வேறு பிரிவுகளில் தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.  


இதில் 2022ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அலியா பட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த பாலியல் தொழிலாளியாக இருந்த கங்குபாய் கத்தியவாடியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட உண்மை கதையில் கங்குபாயாக பாலிவுட் நடிகை அலியா பட் நடித்திருந்தார். பாலியல் தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி மும்பையையே ஆட்டிப்படைத்த மிகப்பெரிய அரசியல் தலைவராக மாறிய கங்குபாயின் லட்சிய கதையில், அலியா பட் நடிப்பில் அசத்தி இருப்பார். 20 வயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஆலியா பட், தன்னை எப்படி அரசியல் தலைவராக மாற்றி கொண்டார் என்பதே கதையின் கிளைமாக்ஸாக இருக்கும். 






பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி போன்ற வரலாற்று திரைப்படங்களை இயக்கி பாலிவுட்டின் சிறந்த இயக்குநராக பேசப்பட்ட சஞ்சய் லீலா பன்சாலி எடுத்த கங்குபாய் கத்தியவாடியில் அலியா பட் அழகாக நடித்திருப்பார். படத்தில் காட்டப்படும் அவரின் வசீகர அழகும், அதற்கேற்ற நடிப்பும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. அடிமைத்தனத்தில் தொடங்கி அதிகாரத்தன்மை என ஓவ்வொரு காட்சியில் நடிப்பில் அசத்திய அலியா பட்  சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.  



இதேபோன்று சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருது கக்குபாய் கத்தியவாடி படத்துக்காக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.