South Releases : ஓடிடி முதல் தியேட்டர் வரை ! இந்த வாரம் வெளியான மூவிஸ் லிஸ்ட் இதோ!

ஒரு ஆங்கில ஆசிரியருக்கும் பள்ளி நூலகருக்கும் இடையிலான காதலை இப்படம் விளக்குகிறது.

Continues below advertisement

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புது படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில்  செப்டம்பர் முதல் வாரத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகியிருக்கும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்

Continues below advertisement


கோப்ரா :

இந்த படத்தில் சியான் விக்ரம் நடித்துள்ளார். படத்தை  அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். படமானது கணிதத்தைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்யும் ஒரு கணித மேதையை  பற்றிய ஆக்ஷன் த்ரில்லர். படத்தில்  இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அறிமுகமாகியுள்ளார். ரீநிதி ஷெட்டி, ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் நடித்துள்ளனர் . படம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியானது.



நட்சத்திரம் நகர்கிறது :

இந்த படம் காதலுக்கான வரையறையை ஆராய்வதோடு, ஜாதி அடிப்படையிலான கவுரவக் கொலைகளையும் ஆராய்கிறது. படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார் . இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், ஷபீர் கல்லரக்கல், ரெஜின் ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தமிழ் படம் ஆகஸ்ட் 31 அன்று திரையரங்குகளில் வெளியானது.


மை டியர் பூதம்:

இந்த படத்தில் பிரபுதேவா பூதமாக நடித்துள்ளார். படத்தை என்.ராகவன் இயக்கியுள்ளார், முற்றிலும் குழந்தைகளுக்கான படமாக மை டியர் பூதம் உருவாகியுள்ளது. படத்தில் சூப்பர் டீலக்ஸ் புகழ் அஸ்வத் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இது செப்டம்பர் 2 முதல் ZEE5 ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.



சுந்தரி கார்டன்ஸ் :

சார்லி டேவிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் நகைச்சுவை திரைப்படம்தான் சுந்தரி கார்டன்ஸ்.  இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஒரு ஆங்கில ஆசிரியருக்கும் பள்ளி நூலகருக்கும் இடையிலான காதலை இப்படம் விளக்குகிறது. படம் மலையாள மொழியில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.


பல்து ஜான்வர் :

சங்கீத் பி ராஜன்  இயக்கத்தில் பாசில் ஜோசப், இந்திரன்ஸ், ஜானி ஆண்டனி, திலீஷ் போத்தன் மற்றும் ஷம்மி திலகன் ஆகியோரது நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் பல்து ஜான்வர். இந்த படம் ஒரு கால்நடை மருத்துவருக்கும் , விலங்குகளுக்கும் இடையே இருக்கும் பாச பிணைப்பையும் , மருத்துவரின் வாழ்க்கை முறையையும் காட்டுகிறது. மலையாள திரைப்படமான  இது கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியானது.


ஆகாஷா வீடுல்லோ:

கவுதம் கிருஷ்ணா டி இயக்கி நடித்துள்ளார். இவருடன்  பூஜிதா பொன்னாடா மற்றும் தேவி பிரசாத் ஆகியோர் நடித்துள்ளார். படம் செப்டம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola