Taapsee Pannu: “யப்பா சாமி.. நான் வாழ ஆசைப்படுறேன்” - மோடியை பிடிக்குமா என்ற கேள்விக்கு டாப்ஸி பதில்!
டாப்ஸி மோடியை விடுத்து ராகுல் காந்தியை சிறந்த தலைவராக தேர்வு செய்திருந்தால் அதன் விளைவு மோசமாக இருந்திருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகையான டாப்ஸி பன்னு பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
டெல்லியில் பிறந்த பஞ்சாப் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த டாப்ஸி, 2011ம் ஆண்டு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக திகழும் அவர், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் படங்கள் பண்ணியுள்ளார்.
நரேந்திர மோடி vs ராகுல்காந்தி
இந்த நிலையில், ஒரு நேர்காணலில் பங்கேற்ற டாப்ஸியிடம், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு இருவரில் உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நரேந்திர மோடியை சுட்டிக்காட்டி கையெடுத்து கும்பிட்ட டாப்ஸி, நான் இன்னும் இந்தியாவில் வாழ நினைக்கிறேன்” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். ஆனால் அவரது பதில் அரசியல் மற்றும் சினிமாவுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒருவேளை டாப்ஸி மோடியை விடுத்து ராகுல் காந்தியை சிறந்த தலைவராக தேர்வு செய்திருந்தால் அதன் விளைவு மோசமாக இருந்திருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து
இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்து மற்றொரு நேர்காணலில் பேசிய டாப்ஸி, “இந்த பிரச்சனை வீட்டிலிருந்தே தொடங்குகிறது. ஆறு வயது சிறுமியை 10 வயது சிறுவன் ஒருவன் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்கிறான் என்றால் இவ்வளவு இளம் வயதில் அவர்களுக்கு இதுபோன்ற செயல்கள் எப்படித் தெரியும்?. பெற்றோர்கள் ஒருவேளை தங்களுடைய நம் வளர்ப்பில் எதையாவது தவறவிட்டிருக்கலாம். இந்தப் பிரச்சினையை தண்டனையுடன் மட்டும் நம்மால் சுருக்கிவிட முடியாது. இந்த விஷயத்தில் பெற்றோரின் பொறுப்பு மற்றும் கல்வி மிகவும் அவசியம். பாலியல் வன்முறை என்பது வெறும் பெண்களின் பிரச்சினையாக மட்டும் பார்க்கக்கூடாது. இதனை பாலினங்களின் போராக வடிவமைப்பதற்குப் பதிலாக ஆண்- பெண் என்ற அமைப்பில் கூட்டு பொறுப்புணர்வு தேவை” எனவும் அவர் கூறியுள்ளார்.























