நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் சமரசிம்ஹா ரெட்டி (SamaraSimha Reddy) படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி நான்கு மாதங்களை கடந்து விட்ட நிலையில், இத்தகைய ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்கள் வசூலை வாரி குவித்து வருவது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில் இந்த கலாச்சாரம் பிற மொழிகளுக்கும் பரவி வருகிறது. 

அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு வெளியான சமரசிம்ம ரெட்டி படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் சிம்ரன் மற்றும் அஞ்சலா ஜவேரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பி கோபால் இயக்கிய இப்படத்திற்கு விஜயேந்திர பிரசாத் கதை எழுதினார். ரிலீஸான காலகட்டத்தில் சமரசிம்ஹா ரெட்டி  படம் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு மட்டுமலல்லாமல் டிரெண்ட்செட்டர் படமாகவும் மாறியது. மேலும் இப்படம் தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களுக்கு உத்வேகம் அளித்தது.

சமரசிம்ஹா ரெட்டி படம் மிகப் பிரமாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நிஜாம் பகுதியில் 100 தியேட்டர்களிலும், ஆந்திரா முழுவதும் 250க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் கர்நாடகாவில், படம் 50 திரைகளில் வெளியிடப்படும் என்றும் சென்னை, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் பிற சில பகுதிகள் உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் பெரிய அளவிலான ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே சமரசிம்ம ரெட்டி படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை சிறப்பிக்கும் விதமாக 4கே தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சமரசிம்ஹா ரெட்டி படம் தற்போதுள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்து, ஆல் டைம் திரையுலக ஹிட்டாக உருவெடுத்துள்ளது. இப்படத்தை ஸ்ரீ மாதா கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

சமரசிம்ஹா ரெட்டி படம் மிகப் பிரமாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நிஜாம் பகுதியில் 100 தியேட்டர்களிலும், ஆந்திரா முழுவதும் 250க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் கர்நாடகாவில், படம் 50 திரைகளில் வெளியிடப்படும் என்றும் சென்னை, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் பிற சில பகுதிகள் உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் பெரிய அளவிலான ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  

இன்று (மார்ச் 2) இப்படம் வெளியாகும் நிலையில் நேற்று மாலை முதலே தியேட்டர்களில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.