Nakshathra Nagesh in SIIMA : விஜய் டிவியின் சீரியல் நடிகை இப்போது ஆனார் சன் டிவியின் ஹோஸ்ட்


விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலானா "தமிழும் சரஸ்வதியும்" சீரியலில் சரஸ்வதியாக ஒவ்வொரு வீட்டிலும் தினமும் நுழையும் சரஸ்வதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நக்‌ஷத்ரா நாகேஷ் தற்போது ஒரு மகிழ்ச்சியான இன்ஸ்டா போஸ்ட் ஒன்றை பூரிப்புடன் பதிவிட்டுள்ளார்.  



சன்டிவியின் ஸ்பெஷல் ஆங்கர்:
 
பல ஆண்டுகளாக அசைக்க முடியாத ஒரு தனித்துவம் வாய்ந்த ஒரு தொகுப்பாளினியாக சன் தொலைக்காட்சியில் வலம் வந்தவர் நக்‌ஷத்ரா நாகேஷ். தொகுப்பாளினியின் பயணத்தை தொடர்ந்து சின்னத்திரையில் லீட் ரோல் கதாநாயகியாக முன்னேறியவர். சில படங்களிலும் அவ்வப்போது தலை காட்டியதும் உண்டு. இவரின் பட படவென பேசும் அழகிற்காகவே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. முதலில் இவரின் பேச்சு அனைவரையும் ஈர்த்தது இன்று அவரின் நடிப்பும் அதனுடன் சேர்த்து அனைவைரையும் கவர்கிறது. 


 






ஆங்கரிங் முதல் ஆக்டர் வரை :


சன் டிவியில் நடிகை குஷ்பூவுடன் இணைந்து "லட்சுமி ஸ்டோர்ஸ்" சீரியலில் நடித்தார் அதற்கு பிறகு நாயகி 2 என சூப்பர்ஹிட் சீரியல்களில் லீட் ரோல்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். நக்‌ஷத்ரா நாகேஷ் முதன்முதலாக திரையில் அறிமுகமானது ஒரு தொகுப்பாளினியாக தான். அவரின் ஃபேவரெட் வேலையும் ஆங்கரிங் தானாம். சன் குடும்ப விருதுகள், சன் சிங்கர் என பல நிகழ்ச்சிகளை ஆங்கரிங் செய்தவர். அதற்கு பின் சீரியலில் மிகவும் பிஸியான பிறகு ஆங்கரிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அந்த கவலை இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போய்விட்டது. 


 






மீண்டும் ஹோஸ்டனா நக்‌ஷத்ரா:
 
ஆம் நக்‌ஷத்ராவிற்கு தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA) வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஒரு ஹோஸ்ட் நக்‌ஷத்ரா நாகேஷ். இந்த மகிழ்ச்சியான தகவலை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவுடன் பகிர்ந்துள்ளர் நக்‌ஷத்ரா. "மீண்டும் எனது சொந்த இடத்திற்கு சென்றுள்ளேன்" என தலைப்பிட்டுள்ளார். நக்‌ஷத்ராவை மீண்டும் ஒரு ஹோஸ்டாக பார்க்கவும் அவரின் படபடப்பான பேச்சை கேட்கவும் அவரது ரசிகர்கள் அனவைரும் வெயிட்டிங்.