Nagabandham : ஆன்மீகம், சாகசங்கள் நிறைந்த ஒரு அற்புத படைப்பு.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'நாகபந்தம்'

அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூத்தாச்சாரி மற்றும் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்துள்ளது. 

Continues below advertisement

அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோ தயாரிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் "நாகபந்தம்" மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூத்தாச்சாரி மற்றும் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்துள்ளது. டெவில் படம் மூலம் இயக்குநராக  தனது திறமையை நிரூபித்து அனைவரையும் கவர்ந்த அபிஷேக் நாமா இந்த பிரம்மாண்டமான படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளார். இந்த படமானது ஆன்மீகம் மற்றும் சாகசங்கள் நிறைந்த ஒரு அற்புதமான கதையை கொண்டுள்ளது.  

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு, இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது. இப்படத்திற்கு நாகபந்தம் - தி சீக்ரெட் ட்ரெஷர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வியக்க வைக்கும் அறிமுக வீடியோ நம்மை மயக்கும் ஒரு மந்திர உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது, மேலும் வசீகரிக்கும் ஒலிப்பதிவு மற்றும் கண்கவர் காட்சிகள் என அத்தனை அம்சங்களும் வியக்கவைக்கிறது.  இதன்  விஎஃப்எக்ஸ் பணிகள் மிகச்சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் புகழ் அவினாஷ் நடிப்பில்,  மர்மமான அகோரி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் இந்த வீடியோ ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இது உண்மையில்  நமது ஆர்வத்தைத் தூண்டுவதோடு விஷ்ணுவின் புதையலுக்கான பரபரப்பான தேடலையும் காட்டுகிறது.  இயக்குநர் அபிஷேக் நாமா மற்றும் தயாரிப்பாளர் மதுசூதன் ராவ் தலைமையில், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு பணியாற்றுவதால், இந்த மிகப்பிரம்மாண்ட திரைப்படம், கண்டிப்பாக மாயாஜாலம், மர்மம் மற்றும் சாகச உலகில் மூழ்கும் அட்டகாசமான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇ.

இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் S ஒளிப்பதிவாளராகவும், அபே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். காந்தி நதிகுடிகார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.நாகபந்தம் ஒரு பான் இந்தியா திரைப்படமாகும், இது 2025 ஆம் ஆண்டில், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும். விரைவில்  படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் பிரபலங்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola