நாக சைதன்யா ஷோபிதா திருமணம்
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது என்றாலும் திருமண தேதி வெளியிடப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் முதலாக திருமணத்திற்கு முந்ந்தை சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற்றன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பரவலாக ஷேர் செய்யப்பட்டன. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நாக சைதன்யா மற்றும் ஷோபிதாவின் திருமணம் நவம்பர் இரண்டாம் வாரத்திற்குள்ளக நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. மேலும் தங்கள் திருமணத்திற்காக ஸ்பெஷல் லொக்கேஷன் ஒன்றை நாகசைதன்யா தேர்வு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் திருமணம்
நாகசைதன்யாவின் தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவ் தெலுங்கில் மிகப்பெரிய நடிகராக திகழ்ந்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹைதராபாதில் உள்ள அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் உருவானவை. இவரைத் தொடர்ந்து நடிகர் நாகர்ஜூனா மற்றும் நாக சைதன்யா என அவரது குடும்பத்தினருக்கும் இந்த ஸ்டுடியோவுக்கு மிக நெருக்கமான பந்தம் இருந்து வருகிறது. தனது தாத்தாவின் நினைவாகவும் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறும் விதமாகவும் தங்களது திருமணத்தை அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் செய்துகொள்ள நாகசைதன்யா ஷோபிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாக சைதன்யா சமந்தா விவாகரத்து
விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைந்து நடித்த போது சமந்தாவுடன் ஏற்பட்ட காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் கியூட் காதல் ஜோடியாக வலம் வந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற போவதாக கடந்த 2021ம் ஆண்டு சோசியல் மீடியா மூலம் அறிக்கையாக வெளியிட்டனர்.அவர்களின் இந்த பிரிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் மத்தியில் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. விவரகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் நடிப்பு பணியில் பிஸியாக ஈடுபட்டு வந்தனர்.
நடிகர் நாக சைதன்யா மற்றும் 'பொன்னியின் செல்வன்' புகழ் வானதி கேரக்டரில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சில காலம் மெளனம் காத்து வந்த இருவரும் பின் தங்கள் திருமண நிச்சயத்தை வெளிப்படையாக அறிவித்தார்கள்.