நாதஸ்வரம் ஶ்ரீத்திகா
சன் டிவி தொடர் நாதஸ்வரம் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஶ்ரீத்திகா. சீரியல் தவிர்த்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகள் முன்பு துபாயைச் சேர்ந்த ஒருவருடன் ஶ்ரீத்திகாவுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரமாக இந்த திருமணத்தில் இருந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து மலர் சீரியலில் தன்னுடன் சேர்ந்து நடித்த எஸ்.ஏஸ்.ஆர் ஆர்யனுடன் காதல் வயப்பட்டார் ஶ்ரீத்திகா. கடந்தாண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஶ்ரீரித்திகா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த சில வாரங்கள் முன்பு இவருக்கு வளைகாப்பு நடந்தது. இதில் பல்வேறு சின்னத்திறை நட்சத்திரங்கள் கடந்துகொண்டார்கள். தற்போது ஶ்ரீத்திக்கா மற்றும் ஆர்யன் தம்பதிக்கு கடந்த பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் இருவரும் தெரிவித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். பெண் குழந்தை பிறந்தது குறித்து இருவரும்ம் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்கள்