Naai Sekar Returns: ‛இது தான் இப்போதைக்கு வடிவேலு டீம்...’ நாய் சேகர் ரிட்டன் புகைப்படங்கள் வெளியீடு!

நவம்பர் மாதம் 11ம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழுவினர் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக, சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்த நடிகர் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் சில காரணங்களால் ஒதுங்கி இருந்த நடிகர் வடிவேலு மீண்டும் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" எனும் திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களை ஆக்கிரமிக்க தயாராகிவிட்டார். 

 

 

யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் :

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார். இவரின் மகளாக விஜய் ஸ்டார் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார். இவர்களுடன் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

4 ஆண்டுகள் இடைவெளி :

2017ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் வடிவேலு இப்படத்தில் ஒரு டிடெக்ட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு காமெடி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடித்துள்ளதால் மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது. 

 

 

ரீ என்ட்ரி என்றாலும் மாஸ் என்ட்ரி :

இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தனது கம் பேக் திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடி  ரசிகர்களை ஊக்குவிக்க உள்ளார். இப்படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ரீ என்ட்ரியை ஒரு மாஸ் என்ட்ரியாக மாற்ற தயாராகிவிட்டார் நடிகர் வடிவேலு. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

 

 

நவம்பர் ரிலீஸ் :

நவம்பர் மாதம் 11ம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழுவினர் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு முழுநீள காமெடி திரைப்படத்துக்கு ஆயுத்தமாக ரெடியாகி வருகிறார்கள் ரசிகர்கள். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola