மிஸ்கின்

தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் மிஸ்கின். இவரது படங்கள் மற்றும் கதை சொல்லும் விதத்திற்கு என தனி ரசிகர்கள் உள்ளன. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியை வைத்து மிஸ்கின் இயக்கியுள்ள படம் ட்ரெயின். மிஸ்கின் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது

ட்ரெயின் படத்தின் மொத்த கதையும் சொன்ன மிஸ்கின்   

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஸ்கின் இயக்கி இசையமைத்துள்ள படம் ட்ரெயின். விஜய் சேதுபதி ,நாசர்,  ஸ்ருதி ஹாசன், நரேன்,  ஷாஜி சென் , செல்வா ,கே.எஸ்.ரவிக்குமார் ,சம்பத் ராஜ் ,கலையரசன், யுகி சேது, இரா.தயானந்த் ,அஜய் ரத்னம், பப்லூ, பிரிதிவீராஜ் வின்சென்ட் அசோகன், கணேஷ் வெங்கட்ராமன் ,ப்ரீத்தி கரன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த ஆண்டு முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் இந்த படத்தின் மொத்த கதையையுமே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் இயக்குநர் மிஸ்கின் .

" என்னுடைய சின்ன வயதில் இருந்து நான் நிறைய ரயில் பயணங்கள் செய்திருக்கிறேன். ரயிலை பார்க்கும் போது ஒரு பெரிய புழு தனது வயிற்றில் பலரை சுமந்து ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதாக நான் கற்பனை செய்திருக்கிறேன். என் கதையில் ஒரு ராட்ச்சச புழுவில் ஆயிரம் மனிதர்கள் ஏறி இறங்குகிறார்கள். இதில் சில இறந்துவிடுகிறார்கள். அதில் கதாநாயகன் வாழ்க்கையை வெறுத்து இறப்பை நோக்கி பயனப்பட்டுக் கொண்டிருக்கிறார். தனது மனைவியின் கல்லறையில் ஒரு பூவை வைத்து விட்டு செத்து போய்விடலாம் என்று அவன் அந்த ரயிலில் ஏறுகிறான். அந்த பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள் அவனது பார்வையை மாற்றுகிறார்கள்' என படத்தின் கதையை கூறியுள்ளார் மிஸ்கின் .