மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘டிரெய்ன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின்  டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது .

Continues below advertisement

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிரெய்ன். விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், நரேன், யூகி சேது, கே.எஸ். ரவிக்குமார், சம்பத் ராஜ், கலையரசன், ஐரா தயானந்த், அஜய் ரத்னம், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள மிஷ்கின் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். ஃபௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ வாட்சன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

டிரெய்ன் பட டிரெய்லர் 

‘டிரெய்ன்’ திரைப்படம் முழுக்க ஒரு ரயில் பயணத்தின் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஒரே இரவில் ரயிலுக்குள் நிகழும் மர்மமான சம்பவங்கள், எதிர்பாராத சிக்கல்கள் மற்றும் அதிலிருந்து உயிர் பிழைப்பதற்கான போராட்டம் என டார்க் திரில்லர் பாணியில் இப்படம் அமைந்துள்ளது. ஏற்கெனவே வெளியான டீசர் படத்தின் மர்மமான உலகத்தை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Continues below advertisement

மிஷ்கின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான ‘சைக்கோ’ திரைப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கியுள்ள முழுநீளத் திரைப்படம் ‘டிரெய்ன்’. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த இப்படம் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.