டோரதி படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சூர்யா கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். ரெட்ரோ ஒரு மொக்கை படம் என்று நேரடியாக படம் குறித்து மிஷ்கின் பேசியது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த் மாதம் வெளியான டோரதி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மாற்று பாலினம் குறித்து இப்படம் பேசுவதால் படம் வெளியான ஒரு சில நாட்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு வெகுஜன ரசிகர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவியத் தொடங்கின. டோரதியை வெற்றியக் கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார்.
ரெட்ரோ ஒரு மொக்கை படம்
மிஷ்கின் பேசியதாவது “நான் ‘நந்தலாலா’, ‘பிசாசு’ படங்கள் பண்ணிட்டு வரும்போது, மதியம் ஒரு மணிக்கு தியேட்டருக்கு விசிட் வருகிறேன் என்று தெரிந்து, கார்த்தி காலையிலேயே படம் பார்த்துட்டு நின்றுகொண்டிருந்தான். நான் உள்ளே போகும்போதுதான் கார்த்தி வந்திருக்கிறான் என்று சொன்னார்கள். உடனே அவனைக் கட்டிப்பிடித்துவிட்டேன். டோரதி படத்திற்கு முன் கார்த்திக் இயக்கிய அந்தப் படத்தைப் பார்த்தேன். அது ஒரு மொக்கப்படம். அந்தப் படம் என்னவோ... ஸ்ட்ரெய்ட்டா போய்க்கொண்டே இருக்கும். ஏதோ ஆட்டம், பாட்டம், டான்ஸ் என்று இருந்தது. பெரிய மொக்கைப் படமாக இருந்தது. இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என்னுடைய உதவி இயக்குநர்கள், ‘கார்த்திக் படம் நல்லா இருக்கும் என்று சொல்வார்கள். நான், ‘பார்க்கிறேன்டா. எனக்கு நிறைய படிக்க வேண்டியது இருக்கு. நிறைய தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு’ என்பேன். நான் படங்களை என்னை மகிழ்விப்பதற்காக மட்டும் தியேட்டரில் சென்று பார்ப்பதில்லை. தியேட்டருக்குச் செல்வதே சாமிகளைக் கும்பிடுவதற்குத்தான். இந்தப் படத்தில் சாமிகளைக் கும்பிட்டேன்” என்று தெரிவித்தார்.
