கரூரில் 'மை லார்ட்' குழு கொடுத்த சர்ப்ரைஸ்: நைட் ஷோவில் ரசிகர்கள் அதிர்ச்சி! அப்படி என்ன செய்தார்கள்?
கரூரில் ’மை லார்ட்’ படக்குழுவினர் தியேட்டரில் நைட் ஷோ பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

கரூரில் ’மை லார்ட்’ படக்குழுவினர் தியேட்டரில் நைட் ஷோ பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சர்ப்ரைஸ் கொடுத்தனர்.
கரூரில், 'மை லார்ட்' திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கத்திற்கு அப்படத்தின் இயக்குனர், நாயகன், நாயகி வருகை தந்தனர். மேலும், இயக்குனர் ராஜமுருகனின் பிறந்த நாளை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
டைரக்டர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாகவும், நடிகை சைத்ரா கதாநாயகியாகவும் நடித்துள்ளா படம் ‘மை லார்ட்’. இந்தப் படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. அப்படத்தின் குழுவினர், பல ஊர்களுக்கு சென்று தியேட்டர் விசிட் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கரூரில் மைலார்ட் திரைப்படம் வெளியாகியுள்ள திண்ணப்பா திரையரங்கத்திற்கு வருகை தந்தனர். திரையரங்கத்திற்குள் சென்ற அக்குழுவினருக்கு திரையரங்கத்திற்குள் நுழையும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இயக்குனர், நாயகன், நாயகி ஆகிய 3 பேரும் ரசிகர்களிடம் பேசி நன்றி தெரிவிதத்தார். நள்ளிரவு நேரத்தில் இவ்வளவு பேரை திரையரங்கில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

அப்போது பேசிய நடிகையிடம், பாட்டு பாடச் சொன்னதால், அந்த நடிகை திரைப்படப் பாடலை பாடி அசத்தினர். அப்போது நடிகர் நடிகைகளுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து அருகில் உள்ள தங்கும் விடுதியில் இயக்குனர் ராஜமுருகனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொருளாதாரா ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ளவர் கணவன் மனைவியான சசிகுமார் மற்றும் சைத்ரா . கிட்னி திருட்டு மற்றும் போலி மரணம் போன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளும் இந்த தம்பதிகள் தங்களுக்கான நீதியை எப்படி போராடி பெறுகிறார்கள் என்பதே மை லார்ட் படத்தின் கதை .























