தமிழ் சூழலில் சீரியல்களின் பங்கு முக்கியமானது. தற்போது இருக்கும் பெரும்பாலான சேனல்களில் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன.குறிப்பாக ஒரு சேனலை டிஆர்பியில் உச்சம் கொண்டு செல்வதிலும் சீரியல்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. 


அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று “முத்தழகு”. சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் திங்கள் முதல் சனி மதியம் 3:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி பொதுமக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் ப்ரோமா காட்சி ஒன்று வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது. 


அதில், அந்த சீரியலின் கதாநாயகி முத்தழகும், ஹீரோவும் கோயிலுக்கு செல்கிறார்கள். முதலில் முத்தழகை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துகொள்கிறார் அந்த தொடரின் நாயகன். இவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க நாயகனின் பாட்டி கோவிலுக்கு செல்லும் மலை பாதையில் முள்ளை போடுகிறார். இதை அறியாத நாயகன் நடக்கும்போது அந்த முள் நாயகனை குத்தி விட, ஹீரோ வலி தாங்கமுடியாமல் ஆவென்று கத்தி விடுகிறார்.  



இதனைபார்த்து மனம் தாங்காத கிராமத்து முரட்டுபெண் முத்தழகு, தன் காதல் கணவனை கைதாங்களாக தூக்கி மலை உச்சிக்கு பாகுபலி சிவகாமி பாட்டி போல தூக்கி செல்கிறார். இதை பார்த்து பின்னாடி வந்த பாட்டி சந்தோஷத்தில் குதிக்க, அதுக்கு பின்னாடி ஒரு ப்ரோமோ சாங் விட்டாங்களே "நீ எனதருகினில் நீ" என்று ஐயோ அந்த கொடுமைய எங்க போய் சொல்லுவேன் என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். 



அதேபோல், இந்த வீடியோ ப்ரோமோவும் மிகப்பெரிய வைரலானது குறிப்பிடத்தக்கது 






இதற்கு முன்னதாக, சன் டிவி ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் ஒரு எபிசோட்டில், ரோஜா இறந்துவிட்டதாக அனுவையும், சாக்ஷியையும் நம்ப வைக்க அர்ஜுன் சார், செண்பகம், அஷ்வின், பூஜா, போலீஸ் அதிகாரி சந்திரகாந்தா போன்ற கதாபத்திரங்கள் ஒரு திட்டம்தீட்டுகின்றனர். 






அதில், ஏற்கனவே இறந்துபோன பெண்ணின் முகத்தில் கர்ணன் படத்தில் அடிக்கடிவந்துசெல்லுமே அது போன்ற ஒரு பொம்மையை வைக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்த முகம் ரோஜா முகமாகவே மாறி விடுகிறது. அட கொக்கமக்கா இது என்ன புது கதையா இருக்கு. அவன் அவன் பல கோடி செலவுபண்ணி என்ன என்னமோ பண்றான்... ஒத்த பத்து ரூபாய் முகமூடில முகத்தையே மாத்திடாங்களே என்று கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். அதேபோல், நாடகமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று கேள்வியும் எழுப்பியும் வருகின்றனர். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண