தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசையமைப்பாளர் தமன். இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமன் “ எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னை தொடர்பு கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள். இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 


 






இசையமைப்பாளர் தமன் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK20 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதில் தளபதி 66 படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் SK20 படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இந்தப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை இயக்குநர் வெங்கட் பிரபு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


 






இந்தப் படம் தொடர்பாக இசையமைப்பாளர் தமன், சிவகார்த்திகேயன், இயக்குநர் அனுதீப் உள்ளிட்டோர் சந்தித்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோவையும் தமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையிதான் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண