வளர்ந்து வரும் இசையமைப்பாளரும், பிரபல பாடகர்களான திப்பு - ஹரிணியின் மகனான சாய் அபயங்கர் ஏபிபி நாடு நடத்திய தடம்பதிக்கும் தமிழ்நாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
ஏ.ஆர்.ரஹ்மான்தான் உத்வேகம்:
8ம் வகுப்பு படிக்கும்போது படிப்பில் ஆர்வம் இல்லை. எனக்கு இசையில் ஆர்வம் என்று சொன்னேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள். நான் பைசா வீண் பண்ண வேண்டாம். இசையில்தான் ஆர்வம் என்று சொன்னதும் அவர்கள் புரிந்து கொண்டனர். தொடர்ச்சியாக வேலை செய்வது அவசியம் ஆகும்.
பாலாஜி, அட்லீ, உன்னி, கீர்த்தீஸ்வரன் ஆகிய இயக்குனர்கள் அனைவரும் நீங்க என்ன தர்றீங்கனு பாக்குறோம்னு வேலை வாங்குறாங்க. நாம் கடினமாக உழைத்தால் அது தொடரும். எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் உத்வேகம். வெளியில போகனும்னு நண்பர்கள் கூப்பிட்டுச் சென்றாலும் பாட்டு முடிச்சுட்டு வருவேனு சொல்ற மனநிலைதான் இருக்கும்.
நல்ல பையன் மாதிரி நடிப்பேன்:
சிம்பு அண்ணாவுடன் சூப்பரான பணி அனுபவம் உள்ளது. அவர் அனைத்தும் பண்ணுவாரு. அவர் எல்லாம் சொல்லுவாரு. வெனிஸில் விரைவில் ஒரு ப்ரமோ வெளியாக உள்ளது. விரைவில் ஒரு அறிவிப்பு வெளியாக உள்ளது. நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன். ஆனால் நல்ல நடிக்கமாட்டேன். அதனால் இசை மட்டும்தான். நமக்கு பிடிச்சு பண்ணுற வேலைக்கு காசு தர்றாங்கனு சொல்றப்ப அது பெரிய விஷயம். எனக்கு வேலைதான் முதல்.
படிப்பு முக்கியம்:
எனக்கு நான் கல்லூரி போகாமல் இருந்த நாட்கள்தான் சிறந்தது. படிப்பு ரொம்ப முக்கியம். எனக்கு இசையிலதான் கவனம் இருந்தது. பாடகர்களை பொறுத்தவரை கால நிர்ணயம் இல்லை. எம்.எஸ்.வி., சீர்காழி பாடினாலும் 3 மணி நேரம் கேட்பேன். என்னோட குரல் வளமைக்கு காரணம் தேன் மட்டுமில்லாமல் பயிற்சியும் ஒரு காரணம் ஆகும்.
என்னுடைய கட்சி சேர பாடல் 45 மில்லியன் வரை அடையும் வரை நான் யாரென்று யாருக்கும் தெரியாது. என் அப்பா. அம்மா யாரென்று யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். சச்சின் சாதித்ததை அவரது மகன் அர்ஜுனும் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நமது தவறு.
இவ்வாறு அவர் பேசினார்.