எஸ்.டி. பர்மனைப் பற்றி நாம் அனைவரும் தெரிந்துருப்போம். அவரது தந்தை ராகுல் தேவ் பர்மன், இந்தியாவின் புதழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர். எஸ்.டி. பர்மனின் மறைவுக்குப் பின்னர் ஹிந்தித் திரையுலகைப் பல வருடங்கள் அரசாண்டவர். ஐம்பத்து நான்கே வயதில் வாரிசில்லாமல் இறந்துவிட்டாலும்கூட, இன்றும் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பல பாடல்கள் இவர் இசைத்தவையே.


முன்னூறு படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார் ஆர்.டி. பர்மன். இவரது இசையில் என்ன சிறப்பு என்றால், எழுபதுகளில் துவங்கிய டிஸ்கோ இசையைக் கச்சிதமாகத் திரைப்படங்களில் உபயோகித்ததே. நடனம் ஆடுவதற்கு ஏதுவான பல பாடல்கள் இவரால் இசையமைக்கப்பட்டு இளைஞர்கள் மத்தியில் மிகப்பிரபலம் அடைந்தன. ஆனால் உண்மையில் ஆர்.டி. பர்மனுக்கு இப்படிப்பட்ட க்ளப் பாடல்களை இசையமைப்பதில் விருப்பமே இருந்ததில்லை. மெலடிகள்தான் ஆர்.டி. பர்மனின் விருப்பத்துக்கு உகந்தவை. இருப்பினும், இயக்குநர்களின் அசைக்கேற்ப டிஸ்கோ பாடல்களை இசையமைத்து, அவற்றிலும் பல சூப்பர்ஹிட்களைக் கொடுத்தார் பர்மன்.


பர்மன் 1970-களின் முற்பகுதியில் ஆஷா போஸ்லேவை சந்தித்து 1980 களில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.







ஆஷா போஸ்லே முன்பு கணபத்ராவ் என்ற நபரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். அது போல பர்மனும் ரீட்டா படேல் என்ற பெண்ணை மணந்து, 1971 இல் பிரிந்தார். அதன்பிறகு, அவர் ஆஷா போஸ்லேவுடன் பல சந்தர்பங்களில் ஒத்துழைத்தார்.  இசையின் மீதான காதல் அவர்களை மேலும் நெருக்கமாக்கியது.  பர்மன் ஆஷா போஸ்லேவை விட ஆறு வயது இளையவர். ஆனாலும் அவர் ஆஷா போஸ்லேவிடம் தனது காதலலை வெளிப்படுத்தினார். ஆஷா முதலில் பர்மனின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனெனில் அவர் முதல் திருமணத்தின் நினைவுகளால் மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.  இருப்பினும், பல வற்புறுத்தலுக்குப் பிறகு, ஆஷா போஸ்லே அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார், அவர்கள் 1980-களில் திருமணம் செய்து கொண்டனர்.


ஆஷா பேஸ்லே பாடகர் என்பதால் திருமணத்திற்கு இத்தம்பதி இருவவரும் இசைத்துறையை ஆண்டனர். இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்தனர், ஆனால் 1980-களின் பிற்பகுதியில் பர்மனின் குடிப்பழக்கத்தின் காரணமாக கடுமையான உடல் பிரச்சனையை ஏற்பட்டது.  இருப்பினும், அவர்கள் பல ஆண்டுகளாக நல்ல நிலையில் இருந்தார். பின்னர்  ஆர்.டி. பர்மனுக்கு பைபாஸ் சிகிச்சை நடக்கிறது. மீண்டு வந்து தொண்ணூறுகளின் துவக்கத்திலும் சில படங்கள் இசையமைக்கிறார். தனது 54 வயதில், மறுபடியும் இன்னொரு மாரடைப்பால் 1994-ஆம் ஆண்டில் காலமானார்.


ராஜேஷ் கன்னா - ஆர்.டி. பர்மன் - கிஷோர் குமார் ஆகியோர்களின் கூட்டணி மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட முப்பது படங்கள் ராஜேஷ் கன்னாவுக்கு ஆர்.டி. பர்மன் இசையமைத்திருக்கிறார். கிஷோர் குமார், எஸ்.டி. பர்மனுக்கு மட்டுமல்லாமல் ஆர்.டி. பர்மனுக்கும் உற்ற நண்பர் என்பதால் கிஷோர்குமாரே பல பாடல்களை ஆர்.டி. பர்மனின் இசையில் பாடியிருக்கிறார். அதேசமாம் முஹம்மது ரஃபிக்கும் ஏராளமான ஹிட்கள் ஆர்.டி. பர்மனின் இசையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.