கேப்டன் மில்லர்


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர்.  பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி. வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது கேப்டன் மில்லர் திரைப்படம்.


கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்


 நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து விரைவில் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜி. வி பிரகாஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரனுடனாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


கூடுதலாக கேப்டன் மில்லர் படத்தில் இடம்பெற்றிருக்கும் “கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்” பாடலின் ஒரு சில வரிகளையும் பகிர்ந்துள்ளார். தனுஷ் இந்தப் பாடலை பாடியுள்ளார் என்று ஜி வி பிரகாஷ் தெரிவித்துள்ளது ரசிகரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஜி வி பிரகாஷ் பகிர்ந்த பாடல் வரிகள்






இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் …


புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….


நாந்தாண்டா நீதி …. நாந்தாண்டா நீதி ….


Killer killer captain miller ….. Killer killer captain miller …..