முஃபாசா: தி லயன் கிங் ஓடிடி ரிலீஸ்
இயக்குநர் பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் வால்ட் டிஸ்னி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் 'முஃபாசா: தி லயன் கிங்'. ஹாலிவுட்டில் உருவான முஃபாசா தி லயன் கிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.
சிம்பா பிரைட் லான்ட்ஸின் மன்னரான பிறகு சிம்பாவிற்கும், நலாவிற்கும் கியாரா என்ற மகள் பிறக்கிறது. இதைத் தொடர்ந்து சிம்பா மற்றும் நலா இருவரும் அடுத்த குட்டியை எதிர்பார்க்கிறார்கள். இதற்காக அவர்கள் நலா பிரசவம் செய்யக் கூடிய சோலைக்கு செல்கிறார்கள்.
அதன் பிறகு நடக்கும் சம்பங்கள் தான் படத்தின் கதையாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிம்பா, நலா, கியாரா, முஃபாசா, ரஃபிகி என்று முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளன. அதோடு, இந்தப் படத்திற்காக அர்ஜூன் தாஸ், அசோன் செல்வன், சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோர் குரல் கொடுத்தனர்.
கடந்த டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இப்போது ஓடிடியிலும் வெளியாக இருக்கிறது. அது எப்போது திரைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 'முஃபாசா தி லயன் கிங்' படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.