தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் கானா பாடலுக்கு பெயர் போனவர். இவரது இசையில் வெளியான கானா பாடல்கள் இன்றுவரை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இவர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றியும், அவரது இளமை காலங்கள் பற்றியும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 



எம்எஸ்வி என் தெய்வம்


எம்எஸ் விஸ்வநாதன் குறித்து கேட்கையில், "மெல்லிசை மன்னர் என் தெய்வம். குரு இல்ல, உண்மையாகவே நான் தெய்வமாகவே மனசுல வச்சிருக்க ஒருத்தர். அவர் ஸ்டுடியோவுக்கு சாந்தோம்ல இருந்து லஸ் வழியா போவாரு, நான் ஓரமா சைக்கிள்ல நின்னு ஒரு சாமியை பாத்து கும்புடற மாதிரி கும்பிடுவேன். அந்த அளவுக்கு அவர் மேல எனக்கு மரியாதை. அவர்தான் எனக்கு தேனிசை தென்றல் பட்டம் கொடுத்தார். அப்போ நான் தூர்தர்ஷன்ல வேல பாத்துட்டு இருந்தேன். அங்க வயலும் வாழ்வும் நிகழ்ச்சில பாட்டு போட்ற வாய்ப்பு நெறைய கிடைக்கும். அப்போ 200 வது சாமி பாட்டு வெளியானப்போ ஒரு பட்டமளிக்குற விழா ஏற்பாடு பண்றாங்க. எம்எஸ்வி ஐயா கையாள அந்த பட்டத்தை கொடுக்குறாங்க. அப்போ அவர் ஸ்டேஜில் சொல்றார், தேவாவுக்கு பட்டமெல்லாம் கொடுக்காதீங்கன்னு சொல்றார். நான் அதிர்ந்து போய்ட்டேன், ஒரு வேள அதுக்கு தகுதி இல்லையோன்னு நெனச்சா, 'யாராவது அவருக்கு படம் கொடுங்க'ன்னு சொல்றார். அப்புறம் இதே நிகழ்வை ஞாபகமா 25வது பட இசை வெளியீட்டு விழாலயும் சொன்னார்", என்றார்.


தொடர்புடைய செய்திகள்: கட்டிப்பிடி வைத்தியத்தில் கல்லா கட்டும் நபர்! ஒரு மணி நேரத்துக்கு ரூ.7 ஆயிரம்! குவியும் மக்கள்


பார்த்த ஞாபகம் இல்லையோ


பார்த்த ஞாபகம் இல்லையோ பாட்டால எனக்கு வேலை போயிருக்கு என்று கூறிய அவர் மேலும் பேசுகையில், "தூர்தர்ஷனில் வேலை செய்யுறப்போ, நைட்ல செட் போட்ற நாங்க மட்டும்தான் இருப்போம், அப்போ என்ன கூப்பிட்டு அந்த பியானோ சும்மாதான் இருக்கு ஏதாவது வாசி கேட்டுகிட்டே வேலை செய்வோம்ன்னு சொன்னாங்க. நானும் யாரும்தான் இல்லையேன்னு வசிச்சேன். அப்போதான் பார்த்த ஞாபகம் இல்லையோ பாட்ட பாடினேன். அதை ஒரு அம்மா ஒருதங்க காலைல மேனேஜர்கிட்ட சொல்லவும் என்னை 15 நாள் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் பின்னால பெரிய இசையமைப்பாளர் ஆனதும் அந்தம்மா வந்து இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் ஆவீங்கன்னு நெனைக்கல, என்ன மன்னிச்சுடுங்கன்னு சொன்னாங்க", என்றார்.



தூர்தர்ஷன் வேலை


தூர்தர்ஷனில் வேலைபார்த்தது குறித்து பேசுகையில், "தூர்தர்ஷன்ல ரொம்ப நாள் வேலை பார்த்தேன். அண்ணாமலை வெளியாகுற வரைக்கும் தூர்தர்ஷன்ல இருந்தேன். சினிமாவுல தொடர்ந்து வாய்ப்புகள் வரும்ன்னு நான் நம்பவே இல்ல. அதனால இதுக்காக நேரம் ஒதுக்கிட்டு வேலைக்கு போய்கிட்டே இருப்பேன். அப்புறம் அங்க உள்ள ஒருத்தர்தான் நீங்கதான் பெரிய இசையமைப்பாளர் ஆகிட்டீங்க இன்னுமா இதுல வேலை பார்க்கும்ன்னு நெனைக்குறீங்கன்னு கேட்டார். நான் பார்த்தா என்ன சார்னு கேட்டேன், அப்போ பார்க்கிற எண்ணத்துல இருக்கீங்களான்னு கேட்டார். இல்ல பெரிய படத்துல பண்ணிடீங்க இனிமே நெறைய படங்களுக்கு பண்ணுவீங்க, இங்க யாராவது வேலை இல்லாத ஒருதற்கு அந்த வேலை கிடைக்குமேன்னு சொன்னார். சரின்னு வேலையை விட்டேன்." என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.