மராத்தி, ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். தெலுங்கு சினிமாவில் அவர் நடித்த சீதா ராமம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பிறகு தி ஃபேமிலி ஸ்டார், கல்கி 2989 ஏடி ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். சினிமாவில் நடிக்க தொடங்கிய போது பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது மிருணாள் தாகூர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஹலோ நந்தன் படம் தான் மிருணாள் தாகூரின் முதல் படம். இந்தப் படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். லவ் சோனியா, சூப்பர் 30, பாட்லா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரிஸ், தமாகா, ஜெர்சி, செல்ஃபி, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் அவரது நடிப்பில் சன் ஆஃப் சர்தார் 2, டகோயிட்: ஏ லவ் ஸ்டோரி, பூஜா மேரி ஜான் உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வரிசையாக இந்த வருடம் வெளியாக இருக்கின்றன.
இந்த நிலையில் தான் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக என்ன காரணம் என்று கூறிய அவர், என்னுடைய அம்மாவும், அப்பாவும், ஆபாச காட்சியிலும், முத்தக் காட்சியிலும் நடிக்க கூடாது என்று கண்டீஷன் போட்டார்கள். இதன் காரணமாக எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. வந்த ஒரு சில வாய்ப்புகளையும் காட்சிகள் காரணமாக நான் இழந்தேன்.
அதன் பிறகு எங்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயம் வர அம்மாவிடமும், அப்பாவிடமும் பேசி சம்மதிக்க வைத்தேன். கவர்ச்சி மற்றும் முத்தக் காட்சிகளில் நடித்தால் தான் சினிமாவில் உச்சம் தொட முடியும் என்று நான் அவர்களுக்கு புரிய வைத்தேன். அதன் பிறகு வரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்தேன். அப்படி அவர் நடித்த படுக்கையறை காட்சி கொண்ட படம் தான் லவ் சோனியா. இந்தப் படத்தில் அவரது பெற்றோர்கள் எந்த ரோலில் நடிக்க கூடாது என்று கண்டீஷன் போட்டார்களோ அந்த ரோலில் பெற்றோரிடம் சம்மதம் வாங்கிய பின்னரே நடித்தாராம். சம்மதமே வாங்கி நடித்திருந்தாலும், பெற்றோரின் கண்டீஷனை முதல் படத்திலேயே காற்றில் பறக்க விட்டு விட்டார் மிருணாள்.