புதுமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள திரைப்பட்ம் ‘சைரன்’. நடிகைகள் கீர்த்தி சுரேஷ்,  அனுபமா பரமேஸ்வரன், நடிகர்கள் யோகிபாபு சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ்குமார் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.


ஆம்புலன்ஸ் ட்ரைவராகவும், ஆயுள் தண்டனைக் கைதியாகவும் ஜெயம் ரவி தோன்றும் வகையில் சஸ்பென்ஸ் கலந்து முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் கவனமீர்த்தது.  இந்நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்தின முதல் ஷோவை கண்டுகளித்துள்ள ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்.






சைரன் படத்தின் முதல் பாதி கொடுத்த டிக்கெட் பணத்துக்கு சூப்பர் எனக் கூறியுள்ளார்.


 






"முதல் பாதி நன்றாக சென்றுள்ளது. திரைக்கதை ஒன்ற வைக்கிறது. ஜெயில் செட் சூப்பர், மேக்கிங் ரொம்ப சிறப்பு" எனக் கூறியுள்ளார்.






“யோகி பாபுவின் காமெடி டைமிங் கதைக்கு அழகு சேர்க்கிறது. ஒட்டுமொத்தமாக சிறப்பான எண்டர்டெய்னர்” எனக் கூறியுள்ளார்.






“ஜெயம் ரவியின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் ஜொலிக்கிறது. இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் சிறப்பான கதையை வடிவமைத்து இறுதிவரை கட்டிப்போடுகிறார்” எனக் கூறியுள்ளார். 


 






“எமோஷனல், ஆக்சன், பழிவாங்கும் கதை. ஜெயம் ரவி பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் போலீசாக நன்றாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரனுக்கு காட்சிகள் பெரிதாக இல்லை ஆனால் நன்றாக நடித்துள்ளார். யோகி பாபு - ஜெயம் ரவி காம்பினேஷன் ஒர்க் ஆகியுள்ளது. பிஜிஎம் சிறப்பு” எனக் கூறியுள்ளார்.