Retro Twitter Review: ஹிட்டுக்காக காத்திருந்த சூர்யா! காப்பாற்றியதா ரெட்ரோ? முதல் விமர்சனம்

Retro Movie Twitter Review: நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் இன்று வெளியான நிலையில் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை இதில் காண்போம்

ரெட்ரோ திரைப்படம்: 

 சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  திரைப்படமான ரெட்ரோ, இன்று மே 1, 2025 அன்று பெரிய திரையரங்களில் . கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தை ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் 2டி என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்கள் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்திருந்தார். 

இந்த நிலையில் படத்தை குறித்து ரசிகர்களின் டிவிட்டர் விமர்சனத்தை பார்ப்போம். 

சூர்யா செம மாஸ், ஒற்றை ஆளாக படத்தை தாங்கியுள்ளார், சூர்யாவின் கம்பேக் தியேட்டர் படம் இது தான், கார்த்திக் சுப்புராஜீன் இயக்கம் மற்றும் திரைக்கதை வழக்கம் போல அமைந்துள்ளது. 

ரசிகர் விமர்சனம்:

எனது அமெரிக்க நண்பரிடமிருந்து FDFS விமர்சனம். சூர்யாவிடமிருந்து இன்னொரு ஃபாள்ப். மரண மொக்கை  மோசமான திரைக்கதை. கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், அல்லது படத்தில் நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டும் கலந்ததால், படம் போராடுகிறது, எங்கே சீரியஸாக இருக்க வேண்டும், எங்கே நகைச்சுவையை இருக்க வேண்டும்? என தெரியாமல் பார்ப்பவர்களுக்கு வேதனையாக தருகிறது.

கேங்ஸ்டராக சூர்யா கலக்கியுள்ளார், 90-களில் வரும் நாயகியாக பூஜா அசத்தியுள்ளார், அதே போல சந்தோஷ் நாரயணன் படத்திற்கு பெரிய பலமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

மற்றோரு ரசிகர் படம் சுமாராக இருப்பதாகவும் படம் முழுக்க கிரிஞ்ச் ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Sponsored Links by Taboola