விஷால் - ஆர்யா நடித்த எனிமி திரைப்படம் எப்படி? ட்விட்டர் ரிவியூ!

இந்த தீபாவளிக்கு அண்ணாத்தே திரைப்படத்திற்கு போட்டியாக வெளியாகி இருக்கும் எனிமி திரைப்படத்தை குறித்து ட்விட்டரில் என்ன கூறுகிறார்கள்!

Continues below advertisement

பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானதால், தமிழ்த் திரையுலகினர் இன்று மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதுவும் தீபாவளி கிளாஷ்களாக இரு திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகியிருப்பது ரசிகர்களை கொண்டாட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஃபேமிலி என்டர்டைனர் படமான அண்ணாத்தவுக்கும், விஷால்-ஆர்யாவின் ஆக்சன் திரைப்படம் எனிமிக்கும் திரையரங்குகளில் கடும் போட்டி நிலவுவதால் ரசிகர்கள் பட வெளியீட்டை கொண்டாடி வருகின்றனர். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. எனிமி திரைப்படத்தை, பார்வையாளர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டுகிறார்கள். நன்கு எழுதப்பட்ட கதைக்களம், முன்னணி டெக்னீஷியன்களை கொண்ட உயர் ஆக்டேன் ஆக்ஷன் அதிரடி காட்சிகள், அதற்கு இணையான கதை மற்றும் மற்ற நடிகர்களின் அற்புதமான நடிப்பு ஆகியவை படத்திற்கு சாதகமாக வேலை செய்துள்ளன.

Continues below advertisement

இப்படத்தில் உள்ள விஷுவல் எஃபெக்ட்ஸ் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது மற்றும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ள சில விமர்சனங்களில் இது தெளிவாகத் தெரிகிறது. ட்விட்டரில் #enemy, #vishal மற்றும் #arya என்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்வதன் மூலம் படத்தின் வெற்றி மற்றும் அண்ணாத்தே உடனான அதன் மோதலைக் கொண்டாடும் ரசிகர்களும் நடிகர்களை பின்தொடர்பவர்களும் ஏற்கனவே மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். அதிலும் தீபாவளிக்கு தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகியுள்ள 3 பெரிய திரைப்படங்களிலுமே பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். இந்த தீபாவளிக்கு எந்த பக்கம் போனாலும் பிரகாஷ் ராஜ் இருப்பார் என்று ட்விட்டரில் கூறி வருகின்றனர். ஆனந்த் ஷங்கர் எழுதி இயக்கிய, எதிரி படத்தில் மிர்னாளினி ரவி மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ், ஜி மாரிமுத்து மற்றும் ஜார்ஜ் மரியான் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர், மினி ஸ்டுடியோவின் எஸ் வினோத் குமார் இந்த ஆக்ஷன் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

தொழில்நுட்ப பிரிவில் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் மற்றும் இசையமைப்பாளர்கள் சாம் சி எஸ் (இசை மற்றும் ஒரு பாடல்) மற்றும் எஸ் தமன் ஆகியோர் வேலை செய்துள்ளனர். எனிமி திரைப்படத்தின் படத்தொகுப்பு வேலைகளை ரேமண்ட் டெரிக் க்ரெஸ்டா செய்துள்ளார். இப்படம் தெலுங்கிலும் அதே தலைப்பில் வெளியாகியுள்ளது. கோரோணா தொற்றுநோய்க்கு பிறகு வெளியாகும் விஷாலின் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்பு சக்ரா வெளியாகி எதிர்ப்பார்த்த வரவேற்பை பெற தவறியது. ஆர்யாவைப் பொறுத்தவரை லாக்டவுனிற்கு பிறகு, டெடி, சார்ப்பட்டா பரம்பரை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட மூன்று படங்கள் வெளியிடப்பட்டன. தற்போது வெளியாகியுள்ள எனிமி திரைப்படம் குறித்து ட்விட்டரில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை பார்க்கலாம்:

 

 

Continues below advertisement