The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்

The Odyssey Movie Twitter Review: க்றிஸ்டோபர் நோலனின் ”தி ஒடிஸி” திரைப்படம் எப்படி இருக்கிறது என படத்தை பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Continues below advertisement

The Odyssey Movie Twitter Review: க்றிஸ்டோபர் நோலனின் ”தி ஒடிஸி” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

Continues below advertisement

”தி ஒடிஸி” திரைப்படம்

உலக புகழ்பெற்ற இயக்குனர்களின் ஒருவரான க்றிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில், வரலாற்று புனைவுக் கதையை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி ஒடிஸி. மேட் டேமன், டாம் ஹாலண்ட் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக நோலன் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியாவிற்கு வருகை தந்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். மும்பையில் படத்தின் சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  தி ஒடிஸி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள 70எம்எம் ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கான தரத்தில் இப்படம் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளனது. ஆனாலும், அந்த தரத்தில் இப்படத்தை திரையிட உலகம் முழுவதும் வெறும் 40 திரையரங்குகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

”தி ஒடிஸி” திரைப்படம் எப்படி இருக்கு?

கிரேக்க வரலாற்றின் பழமையான பாடலான தி ஒடிஸியை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. கடவுள்களை மையமாக கொண்ட கதைக்களத்தை, மனித கதாபாத்திரங்களுக்கு ஏற்றதாக மாற்றி நோலன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். போரை முடித்த பிறகு ஒடிசியஸ் கதாபாத்திரம் தனது படையுடன் எப்படி சொந்த நாடு திரும்புகிறது, அந்த பயணத்தி எதிர்கொள்ளும் சவால்களை தி ஒடிஸி திரைப்படம் விவாதிக்கிறது. படம் உருவாக்கப்பட்டுள்ள விதம், காட்சி அமைப்புகள், கடலில் மேற்கொள்ளும் பயணம் ஆகியவை கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன. குறிப்பாக பின்னணி இசையை பலரும் பாராட்டுகின்றனர். அதேநேரம், பெரும்பாலான கதை வசனங்கள் மூலமாகவே கடத்தப்படுவதும், சில நீளமான காட்சிகளும் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறதாம். இருப்பினும் இறுதிகட்ட காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்து, ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை தி ஒடிஸி திரைப்படம் வழங்குவதாக படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 ”தி ஒடிஸி” திரைப்படம் - ட்விட்டர் விமர்சனம்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola