கபடி வீரராக அதர்வா - மிரட்டலான நடிப்பில் வெளியான "குருதி ஆட்டம்" ட்ரைலர்  

Trailer: ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அதர்வா முரளி - பிரியா பவனி ஷங்கர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக இருக்கும் "குருதி ஆட்டம்" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

Kurudhi Attam Trailer: கபடி வீரர் அதர்வாவின் மிரட்டலான நடிப்பில் "குருதி ஆட்டம்" ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அதர்வா முரளி - பிரியா பவனி ஷங்கர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் "குருதி ஆட்டம்" திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. இந்த படத்தை ராக் ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய அனில் கிரிஷ் பட தொகுப்பு பணிகளை செய்துள்ளார்.

2017ம் ஆண்டு வெளியான "8 தோட்டாக்கள்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள திரைப்படம் "குருதி ஆட்டம்". இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரைலர் காட்சிகளில் நிறைய சண்டை காட்சியால் இடம் பெற்று இருந்தன. "கண்டிப்பு இல்லாத பசங்க கெட்டு போய்டுவாங்க" என்று பிரியா பவனி ஷங்கர் பேசும் வசனமும் அதர்வா பேசும் பஞ்ச் வசனமும் மிரட்டலாக உள்ளது. 

 

மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் அதர்வா முரளி நடிகர் அஜித்தின் ரசிகராக நடித்துள்ளார். அவர் ஒரு கபடி வீரர் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். படம் ஒரு கபடி விளையாட்டின் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் என்பது போல் தெரிகிறது.  பிரியா பாவனி ஷங்கர் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். இப்படத்தில் ராதா ரவி, ராதிகா சரத்குமார் மற்றும் வாட்சன் சக்ரவர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ராதிகா சரத்குமார் காந்திமதி எனும் கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆக்சன், சென்டிமென்ட், ரொமான்ஸ் என படத்தில் பல தரப்பட்ட உணர்ச்சி வசமான காட்சிகள் மற்றும் ஆவேசமான கட்சிகளும் உள்ளன. ட்ரைலர் காட்சிகளில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் வரும் அனைத்து நடிகர்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தான் படத்தின் 2.57 நிமிடங்கள் ஓடும் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ட்ரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 

இது ஆக்சன் ஜானர் திரைப்படம் என்பதால் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ஆக்சன், சென்டிமென்ட், ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் குடும்ப படமாக இருக்கும் என கூறப்படுகிறது.   

Continues below advertisement
Sponsored Links by Taboola