Dahaad: ‘நேரம் போவதே தெரியவில்லை’ .. ஓடிடி தளத்தில் ஹிட்டடித்த ‘தஹாத்’ வெப் சீரிஸ் - ஓர் பார்வை..!

Dahaad: பெண்களுக்கு நடக்கும் அநீதியை ஒரு பெண்ணாக இருந்து தட்டிக் கேட்டு நீதி வாங்கி கொடுத்தாரா எஸ்.ஐ அஞ்சலி- என்பதை தஹாத் வெப் சீரிஸ் விமர்சனத்தை காணலம்.

Continues below advertisement

சோனாக்ஷி சின்ஹா, குல்ஷன் தேவையா, விஜய் வர்மா, சோஹூம் ஷா ஆகிய பல பிரபலங்கள் நடிப்பில் ரீமா காக்டி, ருச்சிகா ஓபராய் இயக்கத்தில் கௌரவ் ரெய்னா, தரனா மார்வா ஆகியோரின் இசையில் அமேசான் பிரைமில் வெளிவந்துள்ள வெப் சீரிஸ் தஹாத் . இந்த வெப்சீரிஸ் மொத்தம் 8 தொடர்களைக் கொண்டுள்ளது. இந்தத் தொடரை எக்ஸெல் என்டர்டெயின்மென்ட் மற்றும் டைகர் பேபி ஃபிலிம் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தஹாத் வெப் சீரிஸின் விமர்சனத்தைக் காணலாம்.

Continues below advertisement


                                                                                               தஹாத் என்றால் தமிழில் கர்ஜனை என்பது பொருள் 

கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் பொறுப்பு

கதாநாயகி: சோனாக்ஷி சின்ஹா (எஸ்.ஐ அஞ்சலி)

வில்லன்: விஜய் வர்மா (பேராசிரியர் ஆனந்த் ஸ்வர்ணகர்)

குணச்சித்திர கதாபாத்திரத்தில் குல்ஷன் தேவையா (இன்ஸ்பெக்டர் தேவி லால் சிங்), சோஹூம் ஷா(எஸ்.ஐ கைலாஷ் பர்கி) ஆகியோர் நடித்துள்ளனர்.

தஹாத் வெப்சீரிஸின் கதை

பல்வேறு வகையில் இந்திய நாடு பலவிதமாக முன்னேறி வந்தாலும் இங்கு பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பில்லை என்பதே இந்த படத்தின் கரு. இந்த வெப் சீரிஸில் கதாநாயகியாக வரும் சோனாக்ஷி சின்ஹா(அஞ்சலி)  ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் பக்கத்தில் இருக்கும் மண்டலா என்ற  கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாக பணி புரிகிறார். அந்த கிராமம் படிப்பிலும் சரி பகுத்தறிவிலும் சரி சற்று பின்தங்கி உள்ளதால் பெண்களுக்கு எதிரான நடக்கும் அநீதிகளை யாரும் கேள்வி கேட்பதே இல்லை.

குறிப்பாக பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நடக்கும் அநீதியை காவல்துறையை கண்டு கொள்வதில்லை. இப்படி இருக்கும் கிராமத்தில் ஒரு பெண் தனது காதலனுடன் ஓடி விட்டதாகவும் அவர்களை கண்டுபிடித்துத் தருமாறும் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளிக்கிறது.

இதனை விசாரிக்கும் சோனாக்ஷி சின்ஹா(அஞ்சலி) அப்போது தான் இதே போல் பல பெண்கள் காணாமல் போயிருப்பதையும் அவர்கள் கல்யாணக் கோலத்தில் இறந்து கிடப்பதையும் கண்டறிகிறார். ஒரு கட்டத்தில் ஆனந்த் ஸ்வர்ணகர் (விஜய் வர்மா) தான் இதனை செய்கிறார் என்று சந்தேகம் எழுந்தாலும், அவருக்கு எதிராக எந்தவித ஆதாரமும் கிடைக்காததால் ஆனந்த் ஸ்வர்ணகரை கைது செய்ய முடியவில்லை. சோனாக்ஷி சின்ஹா - ஆனந்த் ஸ்வர்ணகரனிடம் இருந்து எப்படி மற்ற பெண்களை காப்பாற்றினார், அவருக்கு எதிராக எப்படி ஆதாரத்தை திரட்டினார் என்பதை விறுவிறுவென சொல்லியிருக்கிறது தஹாத் சீரிஸ்!

நிறை/குறை

நிறை: பரபரப்பான திரைக்கதையும், சுவாரஸ்யமான கதைக்களமும், கதையோடு ஒட்டிய பின்னணி இசையும் என பார்ப்பவர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் இருப்பதே வெப் சீரிஸின் சிறப்பு.

குறை: குறை கூறும் அளவிற்கு இந்த வெப் சீரிஸ் இல்லை என்பதே குறை என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola