வெள்ளிக்கிழமை என்றாலே சினிமா பிரியர்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். இந்த வாரம் (23.06.2023) திரையரங்குகளில் பத்து திரைப்படங்கள் வெளியாகின்றன. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் படங்கள் என்னென்ன என்ற  விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். 


ரெஜினா


சுனைனா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ரெஜினா’.   இந்த படத்தை டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ , பிரித்விராஜ், ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கியவர். ரெஜினா படத்தில் நிவாஸ் அதிதன், ரிது மந்திரா, அனந்த் நாக், தினா, விவேக் பிரசன்னா, பாவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சதீஷ் நாயர் இசையமைத்து  இப்படத்தை தயாரித்துள்ளார். 


ரெஜினா படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.  க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்த்தப்படி இருக்கும். 


பாயும் ஒளி நீ எனக்கு


டாணாக்காரன் வெற்றிக்குப் பிறகு, விக்ரம் பிரபு, வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. கார்த்திக் அத்வைத் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இதன் மூலம் கார்த்திக் அத்வைத் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 


தண்டட்டி


அறிமுக இயக்குநர் ராம் சங்கயா இயக்கியுள்ள படம் ‘தண்டட்டி’. இதில் ரோகிணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் பசுபதி, ரோஹினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா என பலரும்  நடித்துள்ளனர். சர்தார், ரன் பேபி ரன் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தண்டட்டி படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.  சாம்.சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.


நேர்காணலில், “தண்டட்டி படம் உண்மை கதைன்னு சொல்லுவதை காட்டிலும் உண்மைகள் கலந்த கதை என்று சொல்லலாம். தென்மாவட்டங்களில் நான் சிறு வயதில் இருந்த போது தண்டட்டி போட்ட பாட்டிகள் நிறைய பேரு இருப்பாங்க. என் வீட்டு பக்கத்துல தங்கப்பொண்ணு அப்படிங்கிற பாட்டி இருக்கும். நாங்க எப்பவுமே அவங்க கிட்ட வம்பு இழுத்துக்கிட்டே இருப்போம். அப்படியான நிலையில், அந்த பாட்டிகிட்ட, ‘ஒருநாள் உன் காதுல இருக்குற தண்டட்டியை அத்துகிட்டு போயிடுவோம்’ என்று இயக்குநர் ராம் தெரிவித்திருந்தார்.


தலைநகரம் 2


சுந்தர் சி நடித்துள்ள தலைநகரம் திரைப்படம் நாளை வெளியாகிறது. 


2006-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான படம் 'தலைநகரம்'. சுராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ காமெடி மிகவும் பிரபலமானது. 


 ‘தலைநகரம் 2’ படத்தில் ‘முகவரி’, ’தொட்டி ஜெயா’ ஆகிய படங்களை இயக்கிய VZ துரை இயக்கியுள்ளார். ரைட் ஐ சார்பாக எஸ்.எம். பிரபாகரன் இப்படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தில் சுந்தர்.சி தவிர்த்து, பாலக் லால்வானி, தம்பி ராமையா, 'பாகுபலி' பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தலைநகரம் போன்றே இதுவும் ரசிகர்களுக்குப் பிடித்திருக்குமா என்பது நாளை தெரியவரும்.


அழகிய கண்ணே


எஸ்தல் எண்டர்டெய்ன்மெண்ட் (Esthell Entertainer) நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆர். விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘அழகிய கண்ணே’. இந்தப் படத்தின் மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார்


அஸ்வின்ஸ்


பாபிநீடு வழங்கும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்திருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் பிரசாத் தயாரிப்பாளர். வசந்த் ரவி, விமலா ராமன், முரளி ஆகியோர் மிரட்டலான நடித்துள்ளனர். 


1920 horrors of the heart


அவிகா கோர், நவீன் சிங், ராகுல் டேவ் ஆகியோர் நடிப்பில் வெளியாகும் படம் ‘1920: Horrors of the Heart’. கிருஷ்ணா பட் இதை இயக்கியுள்ளார். த்ரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தூமம்


நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள தூமம் நாளை வெளியாகிறது.நடிகை அபர்ணா பாலமுரளி, மகேஷிண்டே பிரதிகாரம் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் ஃபஹத் உடன் இரண்டாம் முறையாக இணைந்துள்ளார். மேலும், நடிகர் ரோஷன் மாத்யூ உள்ளிட்ட பல நடிகர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.


Pixar's Elemental


உலக புகழ்பெற்ற அனிமேசன் திரைப்ப்பட தாயாரிப்பு நிறுவனமான டிஸ்னி பிக்ஸார் தயாரிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் ‘எலமென்டல்’ ( Elemental). வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் பிக்ஸாக் அனிமேசன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


Finding Neme, Brave, The Incredibles, Incridebeles2, Ratatouile, Wall-E, Up, Toy Story 3 ஆகியா மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கிய பீட்டர் சோன் (Peter Sohn) இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.


 Element என்ற நகரில் வசிப்பவர்களை பற்றிய கதை இது. நீர்,நெருப்பு, வானம், காற்று, மண், மேகங்கள் உள்ளிட்டவைகள் வசிக்கும் ஒரு நகரம். இங்கு வசிக்கும் நீர், மற்றும் நெருப்பு இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. ரொமாண்டிக் காமெடி படமாக இது இருக்கும். அதோடு, புலம்பெயர்தல் தொடர்பான விசயங்களை பேசும் முதல் டிஸ்னி படம் என்று சொல்லப்படுகிறது. மிகவும் அழகாக கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 23-ம் தேதி வெளியாகிறது.


வேட்டையாடு விளையாடு


18 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. கெளதம் இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.ஜோதிகா, பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி,டேனியல் பாலாகி உள்ளிட்டோர் நடிப்பில் சிறப்பாக இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் நாளை திரையரங்கில் ரீ-ரிலீஸ் ஆகிறது..


ஹேப்பி மூவி டைம் மக்களே!