பஹல்காம் தீவிரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரிசார்ட் ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய திரை பிரபலங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்கல் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்
நடிகர் மோகன்லால் இரங்கல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது. இதுபோன்ற கொடூரத்தைக் காண்பது மிகவும் வேதனையளிக்கிறது. அப்பாவி உயிர்களைக் கொல்வதை எந்த காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, உங்கள் துக்கம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். முழு தேசமும் துக்கத்தில் உங்களுடன் நிற்கிறது. இருள் சூழ்ந்தாலும் அமைதி நிலவும் என்ற நம்பிக்கையை நாம் ஒருவரையொருவர் சற்று இறுக்கமாகப் பிடித்துக் கொள்வோம், ஒருபோதும் விட்டுவிடக்கூடாது.
நடிகர் பிருத்விராஜ் இரங்கல்
"பஹல்காமில் நடந்ததைக் கண்டு மனமுடைந்தும் கோபமும் வருகிறது. பாதிப்பட்டவர்களுக்கு நீதியும் இந்த சம்பவத்திற்கு காரண்மானவர்கள் நீதி முன் நிறுத்தப்படுவார்கள் என நம்புகிறேன்" என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்
ஜான்வி கபூர் இரங்கல்
பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைத்து மனம் உடைந்துவிட்டேன். ராணுவ உடை அணிந்து இரக்கமற்ற அப்பாவி உயிர்களை கொன்றிருக்கிறார்கள் கோழைகள். இரக்கமற்ற அரக்கர்கள். இந்த மாதிரியான தொடர் தீவிரவாத தாக்குதல் ஆற்றமுடியாத கிளர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. " என பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்