மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லான் ’மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் இரண்டு வெவ்வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
’மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் மலையாள ஆக்ஷன் ஸ்டார் மோகன்லால், நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி (Lijo Jose Pellissery) இருவரும் இணைந்து ஹிட் ப்ராஜக்ட் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் மோகன்லால் புதிய கதைகளத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையால சினிமா உலகின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் மிரட்டும் சினிமா அனுபவத்தை வழங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோகன்லால் இளம் தயாரிப்பாளருடன், இதுவரை நடிக்காத, புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கென பல மெனக்கடல்களை மேற்கொண்டுள்ளார்.லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மலையாள சினிமாவில் புதிய திரைமொழியை உருவாக்கியவர்.இவர் மோகன்லால் போன்ற நடிகருடன் இணைந்து எடுக்கும் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு திரை ஆர்வலர்கள், ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மலைக்கோட்டை வாலிபன்
‘நண்பகல் நேரத்து மயக்கம்’,‘ஜல்லிக்கட்டு’,‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’ உள்ளிட்ட மலையாள படங்கள் மூலமாக வித்தியாசமான கதைகளால் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.இவர் இயக்கும் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் தொடங்கியது. இந்தத் திரைப்படம் ஒரு ஸ்போட்ஸ் த்ரில்லர் என்று கூறப்பட்டது. இதில் மோகன்லால், பிரிட்டிஷ் இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரரான ’தி கிரேட் காமா’ காதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால், இதில் உண்மையில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் ஹிபு மறுத்திருந்தார். இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.மேலும், இந்த திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லர் என்றும், இதில் பல திறாமையான நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றன. இதில் உலக நாயகன் கமல்ஹாசன் மோகன்லாலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, தமிழ் நடிகர் ஜீவா, சோனாலி குல்கர்னி, ஹரிஷ் பெராடி, டேனிஷ் சைத், மணிகண்டன் ஆர் அசாரி, கதா நந்தி, ஹரிபிரசாத் வர்மா உள்ளிட்டவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோகன் லால் லுக்
விளையாட்டை அடிப்படையாக கொண்ட கதை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மோகன்லால் கதைக்கு ஏற்றார்போல நடிக்க வேண்டும் என்று தனது லுக்கை மாற்றி கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாக்ஸிங் வீரராக மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அப்படி என்றால், கட்டுக்கோப்பான இளைஞனாக, விளையாட்டு வீரராக மோகன் லால் நடிக்கலாம் என்றும், அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு தோற்றத்திற்காக மோகன்லால் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தில் மோகன்லால் தாடி லுக்கிற்கு குட்பை சொல்லவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலைக்கோட்டை வாலிபன் டீசர் ரிலீஸ்:
இந்தப் படத்தின் ஹீட்டிங்க் உள்ளிட்ட தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மாதம் டீசர் வெளியாகும் என்று இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி-ன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல்-14 ஆம் தேதி மலையாள புத்தாண்டாக ‘விஷ்ணு’ கொண்டாடப்படும் நாளில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் டீசர் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.