Mohan Sharma on Lakshmi : கணவன் மனைவியா இருந்த நேரம் குறைவு; நிறைய விஷயம் தப்பா நடந்தது - மோகன் ஷர்மாவின் பகீர் பேட்டி 

Mohan sharma on Lakshmi : நடிகை லட்சுமியுடன் நடைபெற்ற திருமணம் பாதியிலேயே முடிந்ததற்கு என்ன காரணம் என அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். 

Continues below advertisement

70ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் லட்சுமி. மலையாள படத்தில் தன்னுடைய ஜோடியாக நடித்த நடிகர் மோகன் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை ஒரு சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. அவர்களுக்கு திருமண முறிவு ஏற்பட என்ன காரணம் என்பதை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மோகன் ஷர்மா தெரிவித்து இருந்தார். 

Continues below advertisement


"எங்களின் திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து செலவு செய்த நேரம் என்பது மிகமிக குறைவு. நாங்கள் இருவரும் படங்களில் பிஸியாக இருந்து வந்தோம். ஒரு சில சமயம் நான் படப்பிடிப்பு இல்லாமல் இருந்த சமயத்தில் குழந்தையை பார்த்து கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அந்த சமயத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஒரு வயது தான் இருக்கும். அப்போது தான் அந்த குழந்தை பேசவே ஆரம்பித்தது. அவளை நர்சரிக்கு அழைத்து செல்வது வருவது என என்னுடைய நாட்கள் அப்படியே நகர்ந்தன. ஆனால் பலதரப்பட்ட காரணங்களால் அந்த வாழ்க்கை நீடிக்கவில்லை. நடைபெற்ற சம்பவங்கள் அது போல அமைந்தது தான் காரணம். 

லட்சுமியின் உண்மையான அம்மா ருக்மணிதான் என்றாலும் என்னிடம் அவர் நெருக்கமாக இருப்பதுபோல காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் பாலக்காடு பிராமணர் என்றும் ருக்மணி அம்மா என்னை தத்தெடுத்து வளர்த்தவர் என என்னிடம் லட்சுமி கதை கட்டி விட்டார். 

நாங்கள் இருவருமே அவரவர்களின் வேலையில் தலையிட்டதே கிடையாது. கணவன் மனைவியாக நாங்கள் இருந்த நேரம் என்பது மிகவும் குறைவு. அது எங்களுக்கு கிடைக்கவேயில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் லட்சுமி நிறைய தப்புகள் செய்துவிட்டார். அதை பற்றி நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. லட்சுமி தன்னுடைய வாழ்க்கையை வேறு ஒரு ஆண் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார். 

என்னை பற்றி எந்த ஒரு இடத்திலும் கிசுகிசு என்பது வந்ததே கிடையாது. அப்படி இருக்கும்போது லட்சுமியால் எனக்கு இது நடந்தது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கும் தவறு செய்ய வாய்ப்பு இல்லாமல் இல்லை. நான் பல பெரிய நடிகைகளுடன் நடித்துள்ளேன். பலரும் என்னை ப்ரபோஸ் செய்துள்ளார்கள். ஆனால் நான் எந்த ஒரு தப்பு செய்தது கிடையாது. எனக்கு அதற்கு திறன் இல்லை.

ஐஸ்வர்யாவுக்கு 12 வயசாகும்வரை நான் அவருடன் இருந்தேன். எப்போதாவது போன் செய்து நலம் விசாரிப்பதுண்டு. நான் அவளுக்கும்  எவ்வளவோ அட்வைஸ் எல்லாம் செய்தேன். அவளும் நிறைய தவறுகள் செய்துவிட்டாள்.  நிறைய தவறான விஷயங்களை பற்றி நான் கேள்விப்பட்டேன். உண்மையான தகவலா இல்லையா என எனக்கு தெரியவில்லை. ஆனால் ஐஸ்வர்யா 10 வயசு இருக்கும் போது நான் அவளை வளர்ப்பதற்காக வழக்கு எல்லாம் தொடர்ந்தேன். அவள் என்னுடைய சொந்த மகள் கிடையாது அதனால் கோர்ட்டில் கேஸ் நிற்காது என சொன்னதால் அப்படியே விட்டுவிட்டேன்" என பேசி இருந்தார்.  

Continues below advertisement