Rudra Thandavam | ”ஒரு முள்ளை அகற்ற இன்னொரு முள் தேவைபடுகிறது” - திரௌபதி இயக்குனர் கொடுத்த அப்டேட்!

இந்த படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய  கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இதுதான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க கூடுதல் காரணமாக உள்ளது.

Continues below advertisement

திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி-யின் அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ருத்ர தாண்டவம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய  கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இதுதான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க கூடுதல் காரணமாக உள்ளது. மேலும் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்க தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தை மோகனே தயாரித்து இயக்குகிறார்.  7ஜி ஃபிலிம்ஸ் சிவா இதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார். திரௌபதி படத்தின் வெளியீட்டு உரிமையையும் இவர்தான் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில் தற்போது டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன் ஜி. தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர் “ஒரு முள்ளை அகற்ற இன்னொரு முள் தேவைபடுகிறது. இன்று மாலை 05:06 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும்.. காத்திருந்து விழிப்புணர்வு பெறுங்கள்  " என குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

இதற்கு கீழே ரசிகர்கள் கலவையான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் படம் வெற்றியடைய வேண்டி ஆதரவாகவும் , சிலர் படம் குறித்து நக்கலடித்தும் வருகின்றனர்.

 

முன்னதாக மோகன் ஜி வண்ணாரப் பேட்டை,  திரௌபதி ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருந்தார். இதில் திரௌபதி படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஷாலினியின் அண்ணனும் , நடிகர் அஜித்தின் மைத்துனனுமான ரிச்சர்ட்தான் நடித்திருந்தார். இந்த படத்தை குறிப்பிட்ட சமுக்கத்தினர் எதிர்த்தனர், குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதரித்தனர். ஊடகங்களிலும் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது திரௌபதி. எது எப்படியோ இந்த படத்தை தயாரித்து கொடுத்த ஜி.எம். ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு  அதிர்ஷடம்தான். குறைந்த பட்ஜெட் முதலீட்டில்  எடுக்கப்பட்ட திரௌபதி படம் நல்ல லாபம் பெற்றுத்தந்தது.  அதேபோல நடிகர் ரிச்சர்ட்டின் நடிப்பையும் பலர் வெகுவாக பாராட்டியிருந்தனர். படம் ரிலீஸான சமயத்தில் , திரையரங்கில் அமர்ந்து  தனது அண்ணனும் கதநாயகனுமான ரிச்சர்ட்டுடன் அமர்ந்து ஷாலினியும் ஷாமிலியும் படம் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியதும் குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola