ஜனவரி 23 ஆம் தேதியான இன்று 6 முக்கியமான திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகியுள்ளன. 15 வருடங்களுக்குப் பின் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் இன்று திரையரங்கில் ரீரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் மற்ற படங்களுக்கு பெரியளவில் வசூல் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் திரெளபதி 2 திரைப்படம் முதல் நாளே வசூலில் பலமாக அடிவாங்கியுள்ளது.
முதல் நாளே வசூலில் அடிவாங்கிய திரெளபதி 2
திரெளபதி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. மோகன் ஜி இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் ரிச்சர்ட் ரிஷி , ரக்ஷனா , நட்டி ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சரித்திர திரைப்படமாக உருவாகியுள்ள திரெளபதி 2 திரைப்படம் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாக இருந்து பின் ஜனவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 515 திரைகளில் திரெளபதி திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் ஆரம்பம் முதலே படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இருக்கவில்லை. சென்னையில் இப்படத்தை வெளியிட்டுள்ள பெரும்பாலான திரையரங்குகள் கூட்டமில்லாமல் காணப்படுகின்றன. மொத்தம் 23 சதவீதம் மட்டுமே படத்திற்கு டிக்கெட் புக்கிங் நடைபெற்றுள்ளது. மொத்தம் 4,3845 இருக்கைகளில் 95721 இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதம் 3 , 11 ஆயிரம் இருக்கைகள் காலியாக உள்ளன. படத்திற்கு வெளியான ஒரு சில விமர்சனங்களும் நெகட்டிவ் விமர்சனங்களே வழங்கியுள்ளதால் முதல் வாரமே படம் தாக்குபிடிப்பது கஷ்டம் என சினிமா வர்த்தக நிபுனர்கள் கூறி வருகிறார்கள்.
துவம்சம் செய்த மங்காத்தா
மறுபக்கம் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு கொடுத்துள்ளார்கள். 550 திரைகளில் வெளியாகியுள்ள மங்காத்தா திரைப்படம் 33 சதவீதம் டிக்கெட் புக்கிங் செய்துள்ளது. 1,61,283 டிக்கெட்கள் இப்படத்திற்காக இதுவரை புக் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளார்கள் ரசிகர்கள்.