இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருது பெற்ற சில நாட்களில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மிதுன் சக்கரவர்த்தி


இந்தி மற்றும் வங்க மொழிப் படங்களில் முதன்மையாக நடித்து வருபவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. மராத்திய இயக்குநர் மிர்னால் சென் இயக்கிய ’மிர்கயா’ படத்தில் முதல் முதலாக திரையில் தோன்றினார். தனது முதல் படத்திற்காக சிறந்த நடிகருக்காக தேசிய விருதை வென்றார். 1982 ஆம் ஆண்டு இந்தியில் இவர் நடித்த ‘டிஸ்கோ டான்ஸர்’ படம் அகில இந்திய வெற்றிபெற்றது மட்டுமில்லாமல் சோவியத் யூனியனிலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. சுரக்ஷா, ஹம் பாஞ்ச், சஹாஸ், வார்தத், ஷௌகீன், தேவை, குத்துச்சண்டை வீரர், கசம் பைடா கர்னே வாலே கி, பியார் ஜுக்தா நஹின், குலாமி, தில்வாலா, ஸ்வராக் சே சுந்தர், நசிஹத், அவினாஷ், நடன நடனம், வதன் கே ரக்வாலே, ப்யார் கா மந்திர், ஆவாஸ், பிரேம் பிரதிக்யா, தாதா, முஜ்ரிம், அக்னிபத், ராவன் ராஜ் மற்றும் ஜல்லாத் உள்ளிட்ட 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் .


பத்மபூஷன் விருது


கம்பீரமான குரல் , ஆக்ரோஷமான வசனங்கள் பேசுவதற்கு பெயர்போனவர் மிதுன் சக்கரவர்த்தி.   2000 ஆண்டு தொடக்கம் முதல் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வந்தன. இதனைத் தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப் படுத்தி வந்தார். பாரதிய ஜனதா கட்சி சாபாக நாடாளுமன்ற உறுப்பினராக சில காலம் இருந்தார்.மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு சமீபத்தில் இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.


திடீர் மாரடைப்பு






கல்கத்தாவில் தனது வீட்டில் இருந்த மிதுன் சக்கரவர்த்தி இன்று காலை 10: 30 மணியளவில் லேசான மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மிதுன் சக்கரவர்த்தி சுயநினைவுடன் இருப்பதாகவும், மென்மையான உணவை எடுத்துக் கொண்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


எனினும் பாலிவுட் திரையுலகில் மிதுன் சக்கரவர்த்தி உடல்நிலை குறித்து வெளியான செய்தி பதற்றம் நிலவி வருகிறது. டான்ஸ் பங்கலா டான்ஸ் என்கிற ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்று வந்த அவர் தனக்கு பத்மபூஷன் விருது வழங்கப் பட்டது குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். பல வருட காத்திருப்புக்குப் பிறகு தனது இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் இந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். தன் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தனது ரசிகர்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்தார். மிதுன் சக்கரவர்த்தியின் மிதுன் சக்கரவர்த்தியின் உடல் நிலை குறித்த அதிகாரப் பூர்வமான தகவலை அவரது குடும்பம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.