Cinema Headlines August 26: ரஜினியை கலாய்த்த அமைச்சர்... நெகட்டிவிட்டிக்கு யுவன் பதிலடி... இன்றைய சினிமா செய்திகள்

Cinema Headlines August 26 : ரஜினியை கலாய்த்து பேசிவிட்டு நண்பர் என சொல்லி பதிலளித்த அமைச்சர் துரைமுருகன். காதிலேயே வாங்கிக்க கூடாது என சொல்லி விமர்சகர்களுக்கு பதில் அளித்த யுவன்.

Continues below advertisement

 

Continues below advertisement

ரஜினியை கலாய்த்த துரைமுருகன் :


அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், தி.மு.க.வில் உள்ள மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை குறிப்பிட்டு பேசுகையில் துரைமுருகன் என்றொரு பழைய மாணவர் கலைஞர் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர் என பேசியது சோசியல் மீடியாவில் வைரலானது. ரஜினிகாந்தின் பேச்சு மறைமுகமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது போல இருந்தது. ரஜினிகாந்த் பேசியபோது விழா மேடையில் சிரிப்பொலி எழுந்தாலும், இந்த கருத்து தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு துரைமுருகன் கிண்டலும் கேலியுமாக வயதான நடிகர்கள் தாடி வளர்ந்து, பல் விழுந்த பிறகும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமலா போய்விட்டது? என பதில் அளித்துவிட்டு அவர் என்னுடைய நண்பர் தான் நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என விளக்கமளித்துள்ளார். 


ஜெயிலில் தர்ஷன் கும்மாளம் :

கன்னட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தர்ஷனின் தோழி பவித்ரா கவுடாவுக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர் ஆபாசமாக மெசேஜ் செய்தது தொடர்பாக நடிகர் தர்ஷன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரேணுகாசுவாமியை காரில் கடத்தி வந்து பெங்களூரில் வைத்து சித்ரவதை செய்து கொன்றனர். கடந்த ஜூன் 9ம் தேதி நடந்த இந்த சம்பவம் காரணமாக ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தர்ஷன் சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தர்ஷன் சிறையில் சிகரெட் பிடிப்பது, போன் கால் பேசுவது போன்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

நமீதாவின் குற்றச்சாட்டு :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நமீதா தற்போது பா.ஜ.க.வில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது கணவருடன் மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில்  சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் அங்குள்ள அதிகாரி உத்திரா என்பவர் மிகவும் மூர்க்கத்தனமாக, அசிங்கமாக பேசினார் என்றும் இந்து என்ற சான்றிதழ், சாதி சான்றிதழ் காட்டுங்கள் என கேட்டார். இது வரையில் என்னிடம் யாருமே இதை கேட்டதில்லை என அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு இது குறித்து தகுந்த விசாரணை நடத்துமாறு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். 

 

கோலி சோடா ரைசிங் டீசர் :

விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'கோலி சோடா' படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து தற்போது கோலி சோடா ரைசிங் என்ற பெயரில் கோலி சோடாவின் 3வது பாகத்தை திரைப்படமாக அல்லாமல் வெப்சீரிசாக எடுத்துள்ளார்.  இதில் இயக்குநர் சேரன், ஷ்யாம், அபிராமி, ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெப்சீரிஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

 

நெகட்டிவிட்டிக்கு யுவன் பதிலடி :

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இதுவரையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. விஜய் நடிப்பில் வெளியான முந்தைய படங்களுக்கு அனிருத் இசையமைத்த பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் 'தி கோட்' பாடல் விமர்சனங்களை பெற்று வருகிறது. யுவன் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார் என்று சமூக வலைதளத்தில் பல்வாறாக கருத்துக்கள் பரவி வருகின்றன. 


அதற்கு யுவன் சோசியல் மீடியா மூலம் பதிலடி கொடுத்ததில் பேசுற வாய் பேசிக்கொண்டே தான் இருக்கும் . அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் நாம் நம் வேலையை செய்துகொண்டேதான் இருக்க வேண்டும் , ஹேட்டர்ஸ் உங்களை கீழ் தள்ளிவிட தான் நினைப்பார்கள் ஆனால் நிங்கள் உங்கள் தலையை நிமிர்ந்து தான் நடக்க வேண்டும் . இவர்கள் பேசுவதை எல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டிருந்தால் நான் இத்தனை வருடம் என்னால் தாக்குபிடித்திருக்க முடியாது. இந்த மாதிரியா நெகட்டிவ் கருத்துக்களுக்கு என் காதுகளை நான் முடிதான் வைத்திருக்கிறேன்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola