தொழில் வாய்ப்புகள் பறிப்போனாலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தொடரும் என்று நடிகை மியா காலிஃபா தெரிவித்துள்ளார்.
ஸ்ரேல்-பாலஸ்தீன போர்:
இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 1948ஆம் ஆண்டு தனி நாடாக இஸ்ரேல் உருவானதில் இருந்தே இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரமே மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. கிழக்கு ஜெருசலேம், காசா, வெஸ்ட் பேங்க் ஆகிய பகுதிகளில் வாழும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேதான் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது. இந்த ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் தான் நேற்று போர் தொடங்கியது.
கடந்த நான்கு நாள்களாக இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் பற்றி எரிகிறது. 5000 ராக்கெடுகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் குழுவினர் தெரிவித்திருகின்றனர். இதற்கு பதிலடி தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டிருகின்றனர். பாலஸ்தீன காசா எல்லையைச் சுற்றிவளைத்திருக்கும் ஒரு லட்சம் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ராணுவத்தினர் அந்தப் பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
இதற்கு பல்வேறு நாட்டின் தலைவர்களு, பிரபலங்களும் தங்களது நிலைப்பாட்டையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மியா காலிஃபா
லெபனான் நாட்டைச் சேர்ந்த நடிகை மியா காலிஃபா இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். பாலஸ்தீன போராளிக்கும், மக்களுக்கும் ஆதவரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் “ இப்போது நடக்கும் கொடுமையை பார்த்த பின்னரும் நீங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் இன்வெறி பக்கம் தவறாக நிற்கிறீர்கள் என்று வரலாறு சொல்லும்.” என்று பதிவிட்டு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இவரது பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு காரணமாக அமெரிக்காவின் பிரபல லைஃப்ஸ்டைல் பொழுதுபோக்கு இதழ் பிளேபாய் நிறுவனம் மியா கலிஃபாவுடன் தொழில் ஒப்பந்தத்தை நீக்கியுள்ளது. இனி எவ்வித வணிக தொடர்பும் இருக்காது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதோடு, இதையடுத்து கனடிய ஒலிபரப்பாளர் மற்றும் வானொலி தொகுப்பாளரும் 'ரெட்லைட் ஹாலண்ட்' நிறுவனத்தின் சிஇஓ-வுமான டூட் ஷாபிரோ என்பவர் மியா காலிஃபாவுடனான பிசினஸ் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக சமூக வலைதளத்திலேயே அறிவித்தது. மேலும், அந்நிறுவனம் நீங்கள் பதிவிட்ட ட்வீட் மிகவும் மோசமானது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள மியா, ”பாலஸ்தீனத்தீற்கு ஆதரவு தெரிவித்ததற்காக எனது தொழில் வாய்ப்புகள் இல்லை என்பதை கூறுவதை விட உங்கள் நிறுவனம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பதை கவனியுங்கள். அதற்கு நீங்கள் வருத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிடுள்ளார்.
இன்றும் என்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் அனைத்து மக்களுக்கும் ஆதரவாக இருப்பேன் என்றும் நான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவள். காலனித்துவத்திற்கு ஆதரவு அளிப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.