தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் அஜித்குமார். இவரைப் பற்றி எம்.ஜி.ஆரின் ஒப்பனைக் கலைஞர் கூறிய கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டராக உலா வந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.


இவரது ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரம். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி.ஆரின் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய இவரின் மகன்தான் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பி.வாசு. 


எம்.ஜி.ஆர். மாதிரியே இருக்க:


இயக்குனர் வாசு ஒரு முறை தனது தந்தை அஜித்தைப் பற்றி கூறியது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய பி.வாசு, பரமசிவன் பண்ணும்போது எங்கப்பா ஒரு வார்த்தை சொல்லுவாரு அஜித்தைப் பாத்து.. யோவ் நீ எம்.ஜி.ஆர். மாதிரியே இருக்கயா.. எங்கப்பாதான் எம்.ஜி.ஆரோட 40 வருஷம் மேக்கப் மேனா இருந்தவரு.. உன் கலரு எல்லாமே எம்.ஜி.ஆர். மாதிரியே இருக்கு. எங்கப்பா ஒருத்தரை எம்.ஜி.ஆர்.னு சொன்னது அஜித்தைத்தான்.


அஜித் ரொம்ப ஹார்ட் ஒர்க். உடம்புல அவருக்கு இருக்கு பிரச்சினை எல்லாம் வச்சுகிட்டு இந்தளவு வளந்து இருக்காருனா உண்மையிலே ஹேட்ஸ் ஆப். 


பிடித்த குணம்:


அஜித்துகிட்ட இன்னொரு பிடிச்ச பழக்கம் என்னனா செயற்கைத் தனம் எல்லாம் கிடையாது. அவரைப் புகழ்ந்து அவருகூட பேசனும்னு கிடையாது. புகழ்ந்தாதான் அவரோட இருப்பீங்கனு கிடையாது. யாரும் என் பின்னாடி இருக்கீங்கனு சொல்றாருனா.. எனக்கு வேணும்னு சொல்றவங்களுக்கு மத்தியில எனக்கு வேணாம்னு சொல்ற கேரக்டரு பிடிக்குது.


இவ்வாறு அவர் கூறினார்.


உச்ச நட்சத்திரமாக திகழும் அஜித்தை பலரும் எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுள்ளனர். பி.வாசுவின் தந்தை 40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் மேக்கப் மேனாக அவருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். தமிழ் திரையுலகின் எவர்கிரீன் ப்ளாக்பஸ்டர் படங்களான பணக்காரன், சின்னத்தம்பி, மன்னன், சேதுபதி ஐ.பி.எஸ்.,உழைப்பாளி, சந்திரமுகி என பல வெற்றிப் படங்களை இயக்கியவர். 


பி.வாசு தன்னுடைய 50வது படமாக அஜித்தை வைத்து பரமசிவன் படத்தை இயக்கினார். அந்த படம் வசூல் ரீதியாக பெரியளவு வெற்றி பெறாவிட்டாலும், அஜித் மிகவும் உடல் இளைத்து காணப்பட்டனர். ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், விஜய், ராகவா லாரன்ஸ் என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கிய பி.வாசு தற்போது படங்கள் ஏதும் இயக்கவில்லை.