எம்ஜிஆர் தன் அரசியல் வாழ்வில் எப்போதெல்லாம் மிகப்பெரிய டென்ஷனான சூழல் வருகிறதோ அப்போதெல்லாம் பாரதிராஜாவை கூப்பிட்டு வைத்து மணிக்கணக்கா பேசுவார் என்ற ரகசியத்தை சொல்லியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இணையகாலத்தில், எப்போது பகிரப்பட்ட வீடியோக்கள் திடீரென வைரலாகி ப்ளாஷ் பேக் நினைவுகளை தட்டி எழுப்பும். அப்படித்தான் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு அடங்கிய வீடியோ ஒன்று ரசிகர்களை நெகிழச் செய்கிறது.
இயக்குநர் பாலச்சந்தரின் கேபி ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் திறப்பு விழாவில் ரஜினி பேசியதுதான் இப்போது கொண்டாடப்படுகிறது.


ரஜினிகாந்த் பேட்டியில் இருந்து..


நீங்க எப்போவாவது பாரதிராஜா நல்ல நடிகர்னு சொல்லிக் கேட்டிருக்கீங்களா. என்னைப் பற்றி மேடைகளில் பேசும்போது அவர் ஒரு நல்ல மனிதர் என்பார். நீங்கள் (நிருபர்கள்) அவரிடம், ஒரு நடிகராக ரஜினி எப்படி எனக் கேட்டுப்பாருங்கள்.. ஹீ இஸ் ஏ வெரி நைஸ் மேன் என்று பதில் சொல்வார். அவர் மனசுல ஓடுறது என்ன தெரியுமா? நான் கல்லுக்குள் ஈரம் படத்தில் எல்லாம் நடிச்சேனே.. உன்னை எப்படி டா இந்த மக்கள் ஏத்துக்கிட்டாங்க என்பதுதான். நான் இன்னிக்கு நடிகனாக இருப்பதற்கு பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களிடம் கற்றுக் கொண்டது தான். அத்துடன் நான் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் கற்றுக் கொண்டதும் தான். ஆம் நான் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தேன். அதுதான் என் பலம். அப்புறம் என்னை இயக்கிய இயக்குநர்களிடம் கற்றுக் கொண்டேன். முதன்முதலில் 16 வயதினிலே படத்தின் கால்ஷீட்டுக்காக பாரதிராஜா என்னைப் பார்த்தான்.


அப்புறம் அவர் தயாரித்த கொடிபறக்குது படத்திற்காக பஞ்சு அருணாச்சலத்தை அனுப்பிவைத்தார். இப்போது இந்த விழாவுக்காக அழைக்க வந்தார். அவர் அழைத்தவுடன் நான் வார்த்தையே சொல்லவில்லை. உடனே வந்துவிட்டேன். இது ஒரு இன்ஸ்டிட்யூட் தான் ஆனால் இயக்குநர் பாலச்சந்தரே ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் தான். 




நமக்கெல்லாம் எம்ஜிஆரை தெரியும். ஆனால் எம்ஜிஆருக்கு ஒரு டென்ஷன் வந்தா உடனே பாரதிராஜா தான் கண்ணுக்கு தெரிவார். பாரதிராஜாவை கூட்டிட்டு வரச் சொல்லி அவர்கிட்ட மணிக் கணக்கா பேசுவாராம். அப்படிப்பட்ட இயக்குநர் பாரதிராஜா.


நான் நடிப்பு முறைப்படி ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் கத்துக்கிட்டு வந்தாலும் கூட என்னை ஒரு இயக்குநர் கேமரா முன்னாடி நிக்க வைச்சாலும் கூட, கேமராவில் நான் அழகாகத் தெரிந்தாலும் கூட கடைசியாக மக்களுக்கு என் முகம் பிடிக்கணும். மக்களுக்கு ஒருத்தரை பிடிச்சா பிடிச்சதுதான். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை தான். அது தான் மாயம். மக்கள் நினைத்தால் தான் யாரும் ஹீரோ ஆக முடியும். வெற்றி பெற முடியும். அதுதான் என் வெற்றிக்கும் காரணம்.


இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.