இன்றைய காலகட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு ஒரு சான்று சொல்ல வேண்டும் என்றால் அதற்கு சிறந்த உதாரணம் யூடியூப் தான். ஐடியில் சம்பாதிப்பவர்களை காட்டிலும் இந்த யூடியூப் சேனல் மூலம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூளை முடுக்கில் இருப்பவர்கள் கூட தங்களுக்குள் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்காட்டி சாதனை படைக்க முடிகிறது. அப்படி சமையல் என்ற கலையை வயக்காட்டில் செய்து லட்சக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு  யூடியூப் சேனல் 'வில்லேஜ் குக்கிங்'.

 

 


வில்லேஜ் குக்கிங்:


அடுப்பங்கரைக்குள் முடங்கி இருந்த சமையலை வெட்டவெளியில் பல அழகான சுற்றுப்புறசூழலில் வைத்து சமைப்பதை புதிய முயற்சியாக  மேற்கொண்ட இந்த சேனல் அதில் வெற்றியும் பெற்றது. அவர்களின் இந்த ட்ரெண்ட் ரசிகர்களை கவனத்தை எளிதில் ஈர்த்து அவர்களை சப்ஸ்கரைபர்களாக மாற்றியுள்ளது. இந்த சேனலுக்கு பல பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருப்பது மேலும் ஒரு ஆச்சரியம் .


'வில்லேஜ் குக்கிங்' யூடியூப் சேனலுக்கு மிக பெரிய ரசிகராக இருக்கும் ஒரு செலிபிரிட்டி தான் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. சமீபத்தில் அவர் கலந்து கொண்ட விழா ஒன்றில் 'வில்லேஜ் குக்கிங்' சேனலை மேடையில் வைத்து பாராட்டியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.





 

ரசிப்பேன்:



மேடையில் நடிகர் சிரஞ்சீவி பேசுகையில் "ஒரு முறை என்னுடைய ஆடிட்டர் மற்றும் லாயர் உடன் நிதியாண்டின் இறுதி மீட்டிங் நடைபெற்றது. அவர்கள் பவர் பாயின்ட் பிரசன்டேஷனை  வைத்து டெக்னிக்கல் விஷயமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் பேசியது எதுவும் எனக்கு புரியவில்லை. அதனால் என்னுடைய மகள் சொல்லிய 'வில்லேஜ் குக்கிங்' என்ற தமிழ் யூடியூப் சேனலை என்னுடைய மொபைல் போன் மூலம் பார்த்து கொண்டு இருந்தேன். என்னுடைய ஆடிட்டர் மற்றும் லாயர் நான் ஏதோ அவர்கள் பேசுவதை வைத்து நோட்ஸ் எடுப்பதாக நினைத்து கொண்டார்கள். 

 

'எல்லோரும் வாங்க ஆல்வேஸ் வேல்கம்ஸ் யூ' என அவர்கள் அனைவரையும் வரவேற்பது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவர்கள் சமைப்பதை நான் பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன்" என நடிகர் சிரஞ்சீவி பேசியது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும்  சிரிப்பொலியை எழுப்பினார்கள்.

'வில்லேஜ் குக்கிங்' யூடியூப் சேனல் அட்மின் மற்றும் ஒளிப்பதிவாளர் சுப்பிரமணியன் வேலுசாமி  தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் நடிகர் சிரஞ்சீவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றிகள் சார். இது ஒரு பெருமையான தருணம்" என நன்றிகளை தெரிவித்து இருந்தார்.

 







அது மட்டுமின்றி நடிகர் சிரஞ்சீவி பேசுகையில் நான் ஏராளமான ரீல்ஸ் கூட பார்ப்பது உண்டு. அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்து இருந்தார். சிரஞ்சீவியின் இந்த பெருந்தன்மையான மனதை அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அவரின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.