தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. பலரும் இவரை கண்ணழகி  என்றழைத்தனர். ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஸ்டார்களுடன் நடித்தவர். ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிந்திருந்தார். இவரது மகள் நைனிகா, தெறி திரைப்படத்தில் தளபதி விஜய்-ன் மகளாக நடித்து அசத்தியிருந்தார். பலரும் நைனிகாவின் நடிப்பை பாராட்டினர். சுட்டிக் குழந்தையாக, மழலை ததும்ப தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நைனிகா. தெறி படம் செம்ம ஹிட்.  குட்டி நைனிகாவின் நடிப்பிற்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது என்றே சொல்லலாம். 


குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய மீனா, தன்னுடைய மகள் நடித்த தெறி திரைப்படம் பற்றியும், தெறி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் நாட்கள் குறித்தும் மனம் திறக்கிறார்...


நைனிகாவின் நடிப்பை கண்டு வியந்த தருணங்கள் பற்றி மீனா ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டது இது...


நைனிகா தெறி படத்தில் நடிக்கிறது முடிவான பிறகு, நான் என்னுடைய ஷூட்டிங் தேதிகளையெல்லாம் கேன்சல் செய்தேன். எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. ஏனெனில், நைனிகாவிற்கு முதல் படம், எப்படி நடிப்பாங்கன்னு தெரியாது; திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்லாம் புதிது; அதனால் நைனிகாவுடனேயே ஷூட்டிங் முழுவதும் இருந்தேன். இரண்டு மூன்று நாள் கழித்து நைனிகா பட யூனிட்-உடன் நன்றாக பழக ஆரம்பித்தார். விஜய் உடனும் நல்ல பேசிப் பழக தொடங்கியிருந்தாள். 
.அவளின் முதல் சீன் பார்த்ததும்தான் இவள் முழு படத்திலும் நல்லா நடிச்சிடுவான்னு எனக்கு நம்பிக்கை வந்தது. நைனிகா நன்றாக நடித்து முதல்முறையாக கைத்தட்டு வாங்கியதும் விஜய்கிட்டதான்.


முதல் நாள்.. தெறி பட ஹூட்டிங் ஸ்பாட்.. முதல் சீன்.  விஜய் பேசப் பேச இவங்களும் டயலாக்குகளையெல்லாம் சரியாக சொன்னாங்க. எனக்கும் யூனிட்ல இருந்தவங்களுக்கும் ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. நைனிகா டெஸ்ட்- ஷூட்டிங்கில் நன்றாக பேசியிருந்தார். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்ல இவ்வளவு நல்லா டயலாக் டெலிவரி எதிர்பார்க்கல. எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு டெஸ்ட்- ஷூட்டிங்கின் போது கூட அவ்வளவு நம்பிக்கை இல்லை; ஆனால், முதல் சீன் பார்த்ததும் எனக்கு முழு நம்பிக்கை வந்தது.அதன் பிறகு முழு படமும் நல்லபடியாக முடிச்சாச்சு. என்று பெருமிதத்துடன் கூறினார். 


நைனிகாவின் மழலைக் குரல் பற்றி கூறுகையில்... நைனிகாவிற்கு டப்பிங் செய்யும்போது நான் ரொம்பவே பயந்தேன். ஏன்னா, அவங்களுக்கு பெரிதாக வார்த்தைகளை நன்றாக உச்சரிக்கக் கூட வராது. அவங்க பேசுறது புரியாது. மக்களுக்கு புரியுமா? ஏத்துப்பாங்களான்னு டைரக்டர் அட்லிகிட்ட கேட்டேன். அவங்க சொன்னாங்க.” இல்ல. இல்லை; மழலையோடு இருந்தா ரொம்பவே நல்லா இருக்கும்”னு சொல்லிடாங்க. என்று கூறினார்.


நைனிகா எதற்கெல்லாம் அடம் பிடிப்பாங்க என்று கேட்டதற்கு,”  நைனிகாவிற்கு lollipop ரொம்பவே பிடிக்கும். தெறி திரைப்பட ஷூட்டிங் அப்போல்லாம் அவங்களுக்கு lollipop கொடுத்துதான் சில டயலாக்குகளை சொல்ல வைப்போம். நைனிகாவிற்கு ‘ஒன் மோர்’ சொன்னா பிடிக்காது. அவங்க ஒரே டேக்ல சீன் ஓகே சொல்லனும்னு நினைப்பாங்க. சீன் ரிப்பீட் செய்தா நடிக்க மாட்டாங்க. 


ஷூட்டிங் நடக்கும்போதே 'I am feeling sleepy'-னு சொல்லிட்டு போயிடுவாங்க. அப்பறம் அவங்கள அடுத்த சீன்ல நடிக்க வைக்க யூனிட்டே சேர்ந்து மெனக்கெடுவோம். 


அதேபோல, நைனிகாவிற்கு மைக்குன்னா ரொம்பவே பிடிக்கும். அட்லீகிட்ட மைக் இருக்காது. பாதி நேரம் நைனிகாகிட்டதான் இருக்கும். அட்லீ அவங்க, ‘நான் சில அனவுஸ்மெண்ட்ஸ் கொடுக்கணும்மா’ சொல்லிட்டு, எதாச்சும் தெரிவிச்சிட்டு மீண்டும் மைக்கை நைனிகாவிடமே கொடுத்துடுவாங்க.. இவ்வாறு மீனா கூறினார்.