குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிறகு 'புதிய கதை' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீனா. முதல் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன. அப்படி இரண்டாவதாக மீனா, இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடித்த படம் தான் 'என் ராசாவின் மனசிலே'. சோலையம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்த அப்படம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. இன்றும் அந்த கதாபாத்திரம் மனசில் பதிந்துள்ளது. 


 



தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் குவிய தமிழ் சினிமா இவரை கொண்டாடி தீர்த்தது. அவரின் க்யூட்டான முகம், அழகான கண்கள். குழந்தைத்தனமான கொஞ்சல் பேச்சு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் மீனா. டாப் மோசட் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார் மீனா. ரஜினி - மீனா, கமல் - மீனா காம்போ சூப்பர் ஹிட் காம்போவாக  அமைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தது. அம்மாவே இவ்வளவு பெரிய ஸ்டார் என்றால் அவரின் மகள் பற்றி சொல்லவா வேண்டும்.   


மீனா மகள் நைனிகா :


மீனாவின் மகள் நைனிகா நடிகர் விஜய் மகளாக தெறி படத்தில் கலக்கியிருந்தார். அதன் மூலம் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமானார் நைனிகா. சமீபத்தில் மீனாவின் 40 ஆண்டுகால திரைப் பயணத்தை முன்னிட்டு அவருக்கு மீனா 40 என்ற பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் 80ஸ், 90ஸ் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மீனாவை வாழ்த்தினர்.


அந்த சமயத்தில் மீனாவின் மகள் பேசிய வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதில் பேசிய நைனிகா, "அம்மா நீங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நீங்க ஒரு நடிகை இல்ல, ஹீரோயின் இல்ல, நீங்க என்னோட அம்மா. நீங்க தானே நான் குழந்தையா  இருக்கும் போதில் இருந்து என்னை பத்துக்குறீங்க, இனிமே நான் உங்கள பாத்துக்க போறேன். உங்களுக்கு நான் எல்லா ஹெல்பும் பண்ண போறேன். நீங்க பாருங்க. வளர்ந்த பிறகு நான் உங்களை சந்தோஷமா பாத்துக்குவேன்" என்றார். 


மேலும் நைனிகா பேசுகையில் "அம்மாவை பற்றி நிறைய தப்பு தப்பான விஷயங்களை சோசியல் மீடியாவில் சொல்கிறார்கள். ப்ளீஸ் அப்படி செய்யாதீங்க! உங்களை பற்றி யாராவது தப்பா பேசினா உங்களுக்கு கஷ்டமா இருக்கும் இல்லையா. அது மாதிரி தானே என்னோட அம்மாவுக்கும் இருக்கும். அதனால் என்னோட அம்மா ரொம்ப ஹர்ட் ஆகுறாங்க. நிறைய அழறாங்க. ப்ளீஸ் இனிமே இப்படி செய்யாதீங்க" என ரெக்வஸ்ட் செய்துகொண்டார் மீனாவின் குட்டி மகள் நைனிகா.