மேலும் அறிய

தாமதமாகும் தனுஷ் படம்..இளையராஜா இசையில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிட்ட மாரி செல்வராஜ்

வாழை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மஞ்சணத்தி என்கிற படத்தை இயக்கி தயாரிக்க இருக்கிறார். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்

இயக்குனர் மாரி செல்வராஜ் தனது 6 ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மஞ்சணத்தி என்று இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில்  வாழை படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்காக முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் மாரி செல்வராஜ் 

பரியேறும் பெருமாள் முதல் பைசன் வரை தொடர்ந்து 5 வெற்றிப்படங்களைக்  கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். தனது நவ்வி ஸ்டுடியோஸ் மூலம் வாழை என்கிற சிறிய பட்ஜெட் படத்தை தயாரித்து இயக்கினார் . இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. தற்போது தனது தயாரிப்பின் கீழ் அடுத்த படத்தின் அறிவிப்பை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். மஞ்சணத்தி என இப்படத்திற்கு டைட்டில் வைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் , ஏ ஆர் ரஹ்மான் ஆகிய இசையமைப்பாளர்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார். 

இளையராஜாவுடன் பணியாற்றுவது குறித்து மாரி செல்வராஜ் 

இசைஞானி இளையராஜாவுடன் மஞ்சணத்தில் படத்தில் பணியாற்றுவது குறித்து மாரி செல்வராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். " இளையராஜா சாருடன் பணியாற்றுவது என்பது சின்ன வயதில் இருந்தே என்னுடைய பெரிய கனவு. அவரை நான் இதுவரை நேரில் கூட பார்த்ததில்லை. இளையராஜாவுடன் பணியாற்ற வேண்டும் என்கிற  ஆசை எனக்கு இருந்தாலும் அதற்கு நான் இன்னும் கொஞ்சம் பக்குவப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்த இசையாக இருக்கக் கூடிய ஒரு நபரிடம் சென்று ஒரு கதையை சொல்லி அந்த கதைக்கு அவர் இசையமைக்க ஒரு பக்குவமான கதை எனக்கு வரவேண்டும் . அப்படி ஒரு கதை வருகையில் நாம் எதுவுமே சொல்ல வேண்டாம்  அவர் இசையமைப்பதை  நான் ஓரமாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை " என இளையராஜா குறித்து மாரி செல்வராஜ் முன்பு பேசியுள்ளார். 

தாமதமாகும் தனுஷ் படம் 

பைசன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார். கர்ணன் படத்தின் வெற்றி தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணி மேல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது. கலைப்புலி தானு இப்படத்தை தயரிக்க இருந்தார். பட்ஜெட் காரணமாகவும் தனுஷின் கால்ஷீட் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்க இன்னும் கால தாமதமாகும் என்பதால் மாரி செல்வராஜ் அதற்கிடையில் ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

தலைப்பு செய்திகள்

சீனு ராமசாமி எழுதிய சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!
சீனு ராமசாமி எழுதிய சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!
கலைஞர் செய்த உதவியை மறந்த ராகவா லாரன்ஸ்..கொந்தளிக்கும் திமுக ஆதரவாளர்கள்
கலைஞர் செய்த உதவியை மறந்த ராகவா லாரன்ஸ்..கொந்தளிக்கும் திமுக ஆதரவாளர்கள்
ஆன்மிக அரசியலுக்கு எப்படியெல்லாம் முட்டு கொடுத்தீங்க...ராகவா லாரன்ஸ் வீடியோ வைரல்
ஆன்மிக அரசியலுக்கு எப்படியெல்லாம் முட்டு கொடுத்தீங்க...ராகவா லாரன்ஸ் வீடியோ வைரல்
புகழை விட தன்மானமே முக்கியம்...ஜான்வி கபூருக்கு நித்யா மேனன் செம அடி
புகழை விட தன்மானமே முக்கியம்...ஜான்வி கபூருக்கு நித்யா மேனன் செம அடி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
Maruti Jimny New Variants: இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
Embed widget