இந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான மாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருந்தாலும்  வசூல் ரீதியாக பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் முன்னிலையில் இருந்து வருகிறது. 5 நாட்களில் பைசன் படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள

Continues below advertisement

பரியேறு பெருமாள் முதல் கடைசியாக வெளியான வாழை திரைப்படம் வரை  தென் மாவட்டங்களில் நிகழும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தொடர்ச்சியாக தனது ஒவ்வொரு கதைகளிலும் பதிவு செய்து வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அரசியல் கருத்தியலாக மட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் சொல்லும் கதைகள் , உருவாக்கும் கதாபாத்திரங்களுக்கு வெகுஜன ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேறு கிடைத்துள்ளது. அந்த வகையில் பைசன் காளமாடன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 5 ஆவது திரைப்படம். 

பைசன் படத்தின் 5 நாள் வசூல் 

பா ரஞ்சித்தின் நீலம் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள பைசன் திரைப்படம் இந்த தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.  தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சாதியை மையமாக வைத்து நிகழ்வு வன்முறைச் சூழல், இந்த பின்னணியில் இருந்து வரும் நாயகன் கபடியில் தேசிய அளவில் சாதித்து காட்டுவதே பைசன் படத்தின் மையக்கதை. துருவ் விக்ரம் , பசுபதி , ரஜிஷா விஜயன் , அமீர் , லால் , அனுபமா பரமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படம் வெளியான முதல் நாள் முதல் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற பைசன் படத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் மக்களிடையே வரவேற்பு அதிகரித்தது. குறிப்பாக துருவ் விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை இப்படம் பெற்றுத் தந்துள்ளது. படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து  சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை இப்படம் உருவாக்கியுள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற பைசன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதா என்கிற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இப்படியான நிலையில் பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement

பைசன் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் ரூ 50 கோடிவரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படமே முன்னிலையில் இருந்து வருகிறது. உலகளவில் டியூட் திரைப்படம் இதுவரை ரூ 68 கோடி வசூலித்துள்ளது.