தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
வாழை படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் காளமாடன் படத்தை இயக்கியுள்ளார். நீலம் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
படத்தை பார்வையிட்ட தயாரிப்பாளர்கள் வியந்து பாராட்டியுள்ளார்கள்." மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் காளமாடன் திரைப்படத்தைப் பார்த்தோம். எங்களை வியப்பில் ஆழ்த்திய ஒரு அனல் பறக்கும் சக்திவாய்ந்த கலைப்படைப்பு. இப்படி ஒரு துணிச்சலும் திறமிக்க படத்தை தயாரித்ததில் அப்லாஸ் பெருமிதம் கொள்கிறது இந்த தீபாவளிக்கு வருகிறான் பைசன்.