மாரி இயக்கத்தில் அண்மையில் வெளியான பைசன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. பைசன் படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்காக இரண்டாவது முறையாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் பணியாற்ற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

பைசன் 10 வசூல் 

நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள பைசன் திரைப்படம் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கி துருவ் விக்ரம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர் , பசுபதி , லால் , அனுபமா பரமேஸ்வரன் , ரஜிஷா விஜயன் , அருவி மதன் , அழகம்பெருமாள் அகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அனைத்து தரப்பு மக்களிடமும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற பைசன் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ 55 கோடி வசூலித்துள்ளது . பைசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தபடியாக தனுஷ் படத்தை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ். சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் இப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்

Continues below advertisement

மீண்டும் ஏ.ஆர் ரஹ்மான் மாரி செல்வராஜ் கூட்டணி

தனுஷ் , கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை அடுத்தடுத்து மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் மகல் இன்பநிதி நாயகனாக அறிமுகமாக இருக்கும் படத்தையும் அவர் இயக்கவிருப்பதாக சமீபத்தில் கூறினார். கர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணியில் மற்றொரு படம் அறிவிக்கப்பட்டது. கலைப்புலி எஸ் தானு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் பணியாற்ற இருப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். முன்னதாக மாமன்னன் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார்.