மார்கோ


தெலுங்கில் பாகுபலி , கன்னடத்தில் கே.ஜி.எஃப் போன்ற படங்கள் பான் இந்திய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வகை படங்களுக்கு பெரிய மார்கெட் ஓப்பனாகியுள்ளது. தொடர்ந்து புஷ்பா 2 , ஜவான் , என தமிழ் , இந்தி , தெலுங்கு என எல்லா மொழிகளிலும் இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிகப்படியான ஆக்‌ஷன் , வன்முறை காட்சிகள் , ஆனாதிக்க பார்வைகள் இந்த வகை படங்களில் அதிகம் இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக இந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கிறது. 


அந்த வகையில் மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான மார்கோ படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. நடிகர் உன்னி முகுந்தன் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் கே.ஜி.எஃப் படத்திற்கு நிகராகவும் பல இடங்களில் கே.ஜி.எஃப் படத்தைவிடமும் அதிக வன்முறை காட்சிகளைக் கொண்ட படமாக உருவாகியுள்ளது மார்க்கோ. மலையாளத்தில் வெளியான இந்த படத்திற்கு பான் இந்திய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது இப்படம். மலையாள சினிமா என்றால் எதார்த்தமான கதைக்களம் என்று நினைத்து வந்த மக்களுக்கு ஆக்‌ஷன் படங்களிலும் நாங்கள் தான் கிங் என காட்டியுள்ளது மார்க்கோ. மார்கோ படம் உருவான விதம் குறித்து பேசிய படத்தின் இயக்குநர் உன்னி முகுந்தன் விஜயின் லியோ படத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். 


லியோ மலையாள மார்கெட்டை கெடுத்தது


" எனக்கு ஆக்‌ஷன் படம் ரொம்ப பிடிக்கும். ஆனால் படத்தில் காட்டும் டிஷூம் டிஷூம் சண்டையில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு நடிகனாக என்னை நிலைநாட்டிக் கொள்ள நான் நிறைய குடும்ப கதைகளில் நடித்தேன். ஆனால் அதிலும் நான் பெரிதாக சம்பாதிக்கவில்லை. அதனால் எனக்கு பிடித்த ஆக்‌ஷம் படங்களை எடுக்கலாம் என முடிவு செய்தேன். கே.ஜி.எஃப் , லியோ மாதிரியான படங்கள் இங்கு வெளியாகி மலையாள சினிமா மார்கெட்டை நிறைய கெடுத்துவிட்டன. என் மக்களுக்கு ஆக்‌ஷன் படங்கள் பிடிக்கும் என்று எனக்கு தெரிந்தது. அவர்கள் விரும்பும் படியான ஆக்‌ஷன் படங்களை கொடுக்க முடிவு செய்து தான் நான் மார்க்கோ படத்தை எடுத்தேன். எனக்கு பிடித்த மாதிரியான படங்களை எடுப்பதற்கு என்னை ஸ்டாராக வைத்து நானே படம் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கு" என உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்