தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர், தங்கமான மனிதர் மற்றும் தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்பது தான் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கிறது.
நடிகர் விஜயகாந்த் உடல் நலம் தேற வேண்டும் என திரை பிரபலங்கள் பலரும் தங்களின் பிரார்த்தனையை அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு விஜயகாந்தால் அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் மூலம் நெகட்டிவ் கதாபாத்திரமாக அறிமுகமானார் மன்சூர் அலிகான். முதல் படமே அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது.
தற்போது நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மிகுந்த மனவேதனையில் இருக்கும் மன்சூர் அலிகான் தனது வேண்டுதலை உருக்கமான அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார்.
"அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன்.
அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறிய செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர் மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்?
எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு !! கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிகர், ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா ... தங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே|வாழிய வாழிய நூறாண்டு '!! தாங்களிடம் அடி வாங்க காத்திருக்கும் தம்பி - மன்சூர் அலிகான்.
திரைபிரபலங்கள் மட்டுமின்றி ஏராளமான ரசிகர்களும் நடிகர் விஜயகாந்திற்காக கடுமையான பிரார்த்தனைகளை செய்து வருகிறார்கள். விரைவில் நடிகர் விஜயகாந்த் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!