பைத்தியமாகி இருப்பேன்... கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை பற்றி மனோஜ் பாரதிராஜா பகிர்ந்த தகவல்!

தனக்கு எல்லாமுமாக இருந்தது தனது மனைவி தான் என்றும், தன்னுடைய வாழ்நாள் ஆசை பற்றியும் தற்போது மனோஜ் பாரதிராஜா பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

மனோஜ் பாரதிராஜா மரணம்:

நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று திடீரென்று உயிரிழந்தது சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த வாரம் தான் இவருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறிய நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்து இவரின் இதயத்தில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டது.

Continues below advertisement

திரையுலகம் ஒன்று கூடி அஞ்சலி:

பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் ஆன மனோஜ், வீட்டில் ஓய்வெடுத்து வந்த இவருக்கு நேற்று மாலை மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.


பக்க பலமாக இருந்தவர் மனைவி:

இவரை பற்றிய பல விஷயங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், தனது மனைவி தன்னை எந்த அளவுக்கு காதலித்தார் என்பது குறித்து பேசிய வீடியோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது தான் அவரது கடைசி இண்டர்வியூ என்றும் கூட பேசப்படுகிறது. அதில், சிகப்பு ரோஜாக்கள் படத்தை இயக்க இருந்தது குறித்தும், தனது சினிமா வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்தது தனது மனைவிதான் என்றும் கூறியிருக்கிறார்.

நிறைவேறாமல் போன ஆசை:

தொடர்ந்து பேசிய இவர், 'சிகப்பு ரோஜாக்கள் ஸ்கிரிப்ட் எழுதி முடித்து கிட்டத்தட்ட13, 14 வருடங்கள் ஆகிவிட்டது. ஏனோ தெரியவில்லை, ஏதோ ஒரு தடங்கள் வந்து கொண்டே இருந்தது. சிகப்பு ரோஜாக்கள் என்றாலே ஏதோ ஒரு தடங்கள் அதனால் அப்படியே வைத்துவிட்டேன். எடுப்பேன், அதற்கான நேரமும் காலமும் வரும் போது கண்டிப்பாக அந்த படத்தை இயக்குவேன் என தன்னுடைய ஆசையை தெரிவித்தார். ஆனால் இவரின் இந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது.

குடும்பம் கொடுத்த நம்பிக்கை:

அதே போல் கஷ்டமோ, நஷ்டமோ என்னுடைய இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும். கமெண்ட் அடிப்பது ஈஸீ தான். அந்த கமெண்டுக்கான வலி உனக்கு வரும் போதுதான் தெரியும். அதைப் பற்றியெல்லாம் ஃபீல் பண்ணுவதில்லை. என்னுடைய மனைவின் சப்போர்ட் இல்லையென்றால் என்னால் சர்வைவ் பண்ணியிருக்க முடியாது. நான் எப்போதோ பைத்திக்காரனாகியிருப்பேன். என்னை நம்பி வந்த ஜீவன் என்னுடைய கஷ்டத்தை அவருடைய கஷ்டமாக எடுத்துக் கொண்டு என்னை விட அதிகமாக கஷ்டப்பட்டு என்னை தேற்றி கொண்டு வந்த ஒரு ஜீவன். அதே மாதிரி தான் என்னுடைய குழந்தைகளும் தான். என தெரிவித்துள்ளார்.


மனோஜ் மற்றும் நந்தனா இருவரும் சாதுரியம் படத்தில் நடிக்கு போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நந்தனா கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கோழிக்கோட்டில் தான் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதனி என்று 2 மகள்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola